|
கிளியநல்லூர் மாகானம் கீழ்புறம் சிலையாத்தி |
விளிதுயிலும் செந்நூல் மேல்முசிறி மாகாணம் |
|
அத்தாணி நெக்குப்பை ஆன குமரக்குடி |
|
பிட்சாண்டார் கோவில் பேர்பெரிய சன்னதியும் |
நச்சரவந் தான்பூண்ட நாதருடன் அம்பலத்தில் |
|
இச்சையும் கூத்தாடும் ஈஸ்வரியாள் சன்னதியும் |
பச்சைமயில் பரவும் பாச்சூர் திருவளரை |
|
கண்ணலூர் கீழ்முசிரி கனல்சொரியும் ஓமாந்தூர் |
வண்ணச்ச நல்லூர் வயற்செட்டிபாளையமும் |
|
கூத்தூர் பழூர் கறைநாடு பூவாழூர் |
நாத்திசையும் கொண்டாடும் நல்லஸ்தலம் சங்கேந்தி |
|
வாய்த்த கிளியூர் வழுதூர் தான்முதலாய் |
சென்னநதி பரவும் தின்னயமாம் அரியலூர் |
|
அன்னங்கள் முட்டையிடும் ஆலம்பாக்க முதலாய் |
திருமலைவாடி செப்பாய் விசாரநல்லூர் |
|
மருவியே தோன்றும் மான்குடிக்கும் நேர்மேற்கு |
பரவும் குறைநாடு வடகரையில் உள்ளதொரு |
|
சத்தரம் வாளாடி தத்தனூர் செம்பழனி |
உத்தர மருதூர் ஓங்குதிரு மங்கலமாம் |
|
சித்தூர் லால்குடி செம்பயனூர் தாளங்குடி |
பருத்தி வளர்ந்தோங்கும் பல்லவரம் வெள்ள நல்லூர்13 |
|
செங்கரும்பு மஞ்சளிஞ்சி தேங்குபிலா பின்னைவனம் |
குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள் |
|
கொளங்கள் தடங்கள் குறைநாட்டில் உள்ளதொரு |
குங்குமம் செவ்வலரி கொளங்கள் தடங்கள் |
|
கங்குல் பகலாக காவிரிசூழ் வடகரையை |
எங்கும் அலைந்து வந்தோம் இனியிடத்தைக் காணோமே |
விருத்தம் |
தேடியே வடகரை யிலுள்ள |
தொருசீ மையெல் லாமும் |
|
ஓடியே அலைந்து வந்தோம் |
என்மகனைக் கண்ட தில்லை |