பக்கம் எண் :

26காத்தவராயன் கதைப்பாடல்

கூடியே கொள்ளடத்துப் படுகைதனை
   மேற்குமுகங் கொண்டெல் லோரும்
 
நாடியே காத்தவனை தேடுதற்கு
   என்னுடன் நடந்து வாரீர்
 
     வசனம் : சேவகர்களே இனி நாம் கொள்ளடத்துப் படுகையை மேற்கு முகமாகச் சென்று காத்தவனைத் தேடுவோம் சேவகர்களே.
நடை
கொள்ளடத்துப் படுகைதனைக் கூடியே யெல்லோரும்
தேடியும் காத்தவனைக் கண்ணிலே காணோமென்று
 
மெள்ள நடந்தார்கள் மேற்கு முகமாக
 
படுகை முதலாகப் பார்த்துமிக நடந்து
திடதிடெனச் சேனைதளம் சேர்ந்து மிகத்தேடி
 
மருச்சலங் காத்தான் வாழ்முதலைப் பரோரம்
குறித்து மிகவந்து கூட்டமாய் நின்றார்கள்
 
குத்துநாணல் பாரோரம் கோமுதலைப் பரோரம்
சுத்தி நிறைந்ததொரு சூழ விருட்சமதில்
 
குயில்களது கூவ கொஞ்சுகிளி பாடிநிற்க
 
மல்லிகையும் செண்பகமும் மலரெல்லாம் பூத்துநிற்க
அல்லி கமலம் அலர்ந்த செந்தாமரையும்
 
காயா மரங்களெலாம் காய்த்து நிறைந்திருக்க
பூவா மரங்களெலாம் பூத்துச் சொரியுதங்கே
 
சாம்பிராணி வாசம் சகல பரிமளம்வீசும்
சம்பிரமாகக் கண்டான் அதிசயத்தை
 
மேகமது கூடி வெயிலே மறைக்கிறதும்
அகமிக மகிழ்ந்திட அனைவோர் புகழ்ந்திட
 
தென்றல் அடிக்கிறதும் தெய்வ சபைபோல
கண்டானே சேப்பிளையான் காத்தான் இருப்பிடத்தை14
 
ஏது புதுமையிது இதற்குமுன் கண்டதில்லை
மாது தனையெடுத்த வர்ணபரி மளமும்