|
| இருக்குமிடம் இதுதான் இப்போது காட்டுகிறேன் |
| துருசாக வாருமென்று சுத்தியடி பார்த்தார். |
| |
| பூமரமும் பூநிழலும் பூமரத்தின் கீழேதான் |
| சாம்பரமும் வீசச் சருவி விளையாட |
| |
| ஆணடியும் பெண்ணடியும் அங்குமிகக் கண்டருளி |
| ஆணடியைக் கண்டு அளந்து மிகப்பார்த்து |
| |
| காத்தானுடை பாதமதைக் கண்டு நமஸ்கரித்து |
| மாலையுடை பாதமதை மகிழ்ந்துமிகத் தெண்டனிட்டு |
| |
| வாருங்கள் சேவகரே வர்ண பரிமணம்தான் |
| பாருக்குள்ளே ஓடிப் பதுங்கி யிருக்கிறான் |
| |
| கண்டவுடன் சேப்பிளைக்கு ஞானமது உண்டாகி |
| தெண்டனிட்டுத் தோத்திரங்கள் செய்தருளி வாருமென்று |
| |
| பாரில் நுழைய பயப்பட்டுச் சேப்பிளையான் |
| அவர் பேரில் புகழ்ந்து படிக்கிறான் விருத்தமாய் |
| விருத்தம் |
| அடியை நாவிருத்தம் கண்டேனய்யா |
| ஆருதான் பாருக் குள்ளே |
| |
| துடியதாய் நுழைய நம்மால் |
| தோத்துமோ தோத்தா தாலே |
| |
| மிடியதாய் வரும் விபத்தையே |
| விலக்குவான் காத்தான் வந்து |
| |
| அடியை நான்தேடி வந்தேன் |
| அன்புடன் வெளியில் வாரும் |
| |
| கடியவிஷ முண்டருளும் அரசனுடைய |
| பாலகனைக் கருத்தில் வைத்து |
| |
| படியதனில் உனைத் தொழுதேன் பாலகனே |
| எனக்கு வரும் இடர்தனை நீரும் |
| |
| சடுதியிலே எனைக்காக்கப் பாரைவிட்டு |
| ஓடிவந்து சகலோர் காண |