|
விடியக்கதிர் எழுவதுபோல் அடியார்க்கு |
முன்தோன்றி விளம்பு வாயே |
|
கலியுகவர தனேபரி மளராசனே |
காத்த சுந்தர மய்யனே |
|
வலியுளமன் றினில்கப வினிலேறிட |
மாலை தன்மண வாளனே |
|
புலியெனப் பாரினில் சிலையென |
வாழ்ந்திடு மகளரு மணிமார்பனே |
|
உலைதனில் மெழுகென வாடினேன் |
எந்தனுக் கருள்செய் வாயே. |
|
ஏறவிட்டு ஏணிதன்னை வாங்குகின்ற15 |
மண்டலம் தன்னிலே என்னைத் |
|
தூரவிட்டு நிற்பதுவும் நியாயமோ |
காத்த வனேதுலக்கமாக |
|
பாரைவிட் டோடிவந்து கழுவேறிப் |
பல்லாண்டு பகர்ந்து கூறு |
|
சாரியிட்ட வாசியின்மேல் எழுந்துவந்து |
நல்வாக்குச் சாற்று வாயே. |
|
பாலகனே உந்தனையான் பரிந்தெடுத்து |
வளர்த்தேனப்பா பாரில் நீயும் |
|
சாலகனாய் மாலைதனைச் சிறையெடுக்க |
ராசனுமே சாட்டி யென்னை |
|
கோலமுடன் உனைத்தேட விட்டதனால் |
தேசமெங்கும் தேடி வந்தேன் |
|
ஆலமுண்ட சிவன்மகனே என்னிடரைத் |
தீர்த்திடவும் அருள் செய்வீரே |
|
தீர்த்திடுவாய் எந்தனுட விபத்துத் தன்னை |
திருவருளால் மாலைமண வாள னேகேள் |
|
கார்த்திடுவாய் எங்கள் குலம்தழைத் தோங்க |
கருணைபொழிந் தருளுவது கடனு னக்கே |
|
பார்த்திடுவாய் எங்கள்பரி தபாந் தன்னை |
பாரைவிட் டோடிவந்து பயனைச் சொல்லி |
|
ஏற்றிடுவாய் கழுவேற ஐயா இப்போ |
இரைந்தோடி என்னெதிரே வருகு வாயே |