|
அப்பா மகனே என்னருதை திருமேனியனே |
செப்பார் முலைமாது தெகட்டாத தெள்ளமுதே |
|
பாப்பாரப் பெண்ணை நீ பரிந்து சிறையெடுத்து |
தாப்பரியமாகத் தானொளித்து வைத்த தினால் |
|
அரசன் உனைப்பிடித்து ஆக்கினை செய்யவென்று |
விரசுடனே சொன்னதனால் வெம்புதே என்மனது |
|
கல்யாணம் செய்து கண்குளிரப் பாராமல் |
நிலையாய்க் கழுவிருக்க நெருங்கினதோ காலமிது |
|
அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல் |
இளமைப் பிராயத்தில் ஏறிக் கழுவிருக்க |
|
முந்தி அரனாரும் முனிந்ததொரு சாபமிதோ |
இந்தப் பெருங்கழுவில் ஏறவோ நீயிருந்தாய் |
|
கைப்பிடியாய் நான்வளர்த்த காத்த பரிமளத்தை |
எப்படி நான் கழுவில் ஏற்றிவைப்பேன் என்றழுதான் |
|
தத்தளித்து நின்றழுக சாமி பரிமளமும் |
மருச்சலங் காத்தான் மாய வடிவாக |
|
குறிச்சழுத சேப்பிளைமுன் கோலமறை வேதியன்போல் |
சீரான காத்தவனார் சிறிது மனமிரங்கி |
|
தன்னை வளர்த்ததொரு தகப்பனென்று காத்தவனார்16 |
முன்னூல் குடுமியுடன் முன்னாக வந்துநின்று |
|
சாத்திரங்கள் சொல்லுகிறார் தங்கப் பரிமளமும் |
தோத்திரங்கள் செய்தருளும் துய்யதொரு மானிடரே |
|
காத்தானுட தன்னடியைக் கண்டீர்கள் எல்லாரும் |
இதமுடனே காத்தவனார் இருக்குமிடம் சொல்லுகிறேன் |
|
காய்ச்சி மதுவெடுக்கும் கனத்த பூவாயிமனை17 |
பாச்சூரில் சென்று பாவை பூவாயிமனை |
|
சொன்னீர் களாமாகில் சுகந்த பரிமளத்தை |
முன்னாகவே காட்டி முத்துப் பரிமளத்தை |
|
மதுவைப் புகட்டியவள் வர்ண பரிமளத்தை |
எதிராகவே காட்டி இனிய பரிமளத்தை |
|
திருடுவாள்காண் பூவாயி தான்போங்க ளென்றுசொன்னார் |