|
கூவாதே சேப்பிளையான் பாரருகே |
குடியிருக்கும் கொடியோன் தன்னை |
|
ஏவாத மக்கள்தனை மூவாத |
மனிதரென்று எண்ணி நீயும் |
|
ஆவாத பிள்ளைதனை ஆரடித்தால் |
உனக்காவ தென்ன இப்போ |
|
பூவாயி மனைபுகுந்தால் காத்தவனைப் |
பிடித்திடுவீர் புகழுள் ளோனே |
|
அய்யரருட் பாதமதை அடிவணங்கி |
சேப்பிளையான் அவ்விடம் விட்டு |
|
மெய்யனே பாச்சூர் பூவாயி |
தனைக்கண்டு விளம்பக் கேட்டு |
|
செய்யெனவே சம்மதியாய் காத்தவனார் |
உண்டருள சரக்குச் சேர்த்து |
|
வையகமதில் காத்தவனார் மதுகுடித்த |
வாறதனை வசனிப் பேனே. |
|
பூவாயியிடம் சேப்பிளை சொல்விருத்தம் |
|
அம்மையே பூவாயி உன்னிடம் வந்ததை |
அருளவே கேள மம்மா |
|
ஆரியப் பேந்திரன் சேவகர்கள் நாங்களும் |
அனுப்பிட வந்தோ மம்மா |
|
செம்மையாய் சீமையைக் காவலும் காக்கின்ற |
சேப்பிளை யான்பெற் றெடுத்த |
|
தீரனெனும் காத்தவன் ஆரிய மாலையைத் |
திருடியே கொண்டு செல்ல |
|
அம்மொழி கொண்டதொரு ராசனும் கோபமாய் |
அவனையே பிடித்து வரவும் |
|
அவனப்பனை அனுப்பிடத் தேடியே காணாமல் |
அவனுள் மனையில் நித்தம் |
|
கண்மணி காத்தவன் வந்திடும் வேளையில் |
கட்டியே எங்க ளிடமாய் |
|
கட்டியே கொடுத்திட்டால் கனகமது நாங்களும் |
கனமுடன் தருகு வோமே |