|
இப்படிச் சொல்லியங்கு இருக்கின்றான் சேப்பிளையான் |
செப்பமுடன் காத்தவனார் தேவியிடம் ஈதுரைப்பார் |
|
வாருமடி பெண்ணே ஒருவசனம் உரைக்கின்றேன் |
பார்தனில் உன்னைப் பரிந்து சிறையெடுக்க |
|
வேதியர்கள் அங்கு வெகுண்டு போய் ராசனிடம் |
சேதி உரைத்திடவே சிறந்து எனைப்பிடிக்க |
|
என்தகப்பன் சேப்பிளையான் சீமையெங்கும் தேடுகிறான் |
அன்புடனே நானும் அவன்கையில் அகப்பட்டு |
|
கண்டு ராசனையும் கழுவேறித் திரும்பி |
உனையழைக்க வருமளவும் கன்னியே பாரதனில் |
|
உண்டு இருமென்று உரைக்கின்றார் காத்தவனார் |
|
காத்தான் சொல்விருத்தம் |
அன்புடைய மங்கையரே சொல்லக் கேளாய் |
அவருடைய கையிலே யான்சிக் கிடினும் |
|
இன்பமுடன் ராசனையும் கண்டு யானும் |
பருங்கழுவில் ஏறிய பின்னுனை அழைக்க |
|
அன்புடனே வந்திடுவேன் அதுவரைக்கும்நீ |
அசையாமல் இருமெனவே வெளியில் வந்து |
|
பண்புடனே பாச்சூர் சென்று காத்தான் |
பாங்குமதி குடிக்க பயனைச் சொல்வேனே |
|
காத்தான் மதுகுடி விருத்தம் |
ராசருட சேவகர்கள் கவிந்ததையும் |
பூவாயி நல்ல தென்று |
|
நேசமுடன் சரக்குவகை நிறையச் சேர்த்து |
மதுவடிய நிறையக் கட்டி |
|
ஆசையுடன் வைத்திருக்க காத்தவனார் |
மதுவருந்தி அவள்தன் வீட்டில் |
|
வாசமுள்ள பூவாயி மதுவுண்டு |
மலரணையில் மயங்கினாரே |