|
| நடை |
| மயங்கிக் கிடந்திடவே மங்கையவள் பூவாயி |
| தியங்கிக் கிடந்தவுடன் தெருவிலே ஓடிவந்து |
| |
| சொன்னாள் சமயமென சொன்னவுடன் கோடிபடை |
| மன்னவர்கள் ஓடிவந்து வளைத்துப் பரிமணத்தை |
| |
| வெறியாய்க் கிடந்துநின்ற வீரியனைத் தான்பிடித்து |
| கருவிக் கயிற்றாலே கட்டினார் கையிறுக |
| |
| கையிறுகக் கட்டவே காத்த பரிமளமும் |
| அய்யமார் கட்டை அறுத்தார் பொடிப்பொடியாய் |
| |
| கட்டுங் கயிற்றாலே கனமாக வந்த படை |
| வெட்டு வானென்று மிகவே பயம் பிடித்து |
| |
| ஓடியே போனாரே உல்லாச ரூபழகன் |
| நாடியே கண்டு நலமாய் மனதிலெண்ணி |
| |
| இன்னுமிவர் சேதியை யாமறிய வேண்டுமென்று |
| பின்னும் மயங்கிப் பலங்குறைந்து தான்கிடக்கும் |
| |
| அன்னவரைப் போல அவர்கிடந்தார் காத்தவனார் |
| |
| இங்கிவனைக் கட்டுதற்கு இன்ன கயிறாகாது |
| சங்கிலிதான் வேண்டுமினு தான்கொண்டு வாருமென்று |
| |
| மதயானை கட்டுகிற வாகன சங்கிலியால் |
| இதவாகத் தான்பிடித்து இறுக்கினார் கையிறுக |
| |
| சங்கிலயால் கட்டிடவே தேட்டாளன் காத்தவனார் |
| அங்கதனைக் கையாலே அறுத்தார் பொடிப் பொடியாய் |
| |
| பொடிப்பொடியாய் அறுத்தெறிந்து பூவிதனைப் பார்த்து |
| கடியமலர்க் குழலீர் கட்டிடநீ பண்ணிவைத்தாய் |
| |
| என்னைப் பிடிக்கவரும் எதிரில்லா வீரருடன் |
| |
| வந்தவர்கள் தன்பலத்தை வகையாயிறிந் தேனடிபூவாயி |
| கந்தமலர்க் குழலீர் கட்டவத்த வீரருடன் |
| |
| என்னைப் பிடிப்பதுவும் எளிதாய் இருக்குமோதான் |
| முன்னால் சிவனாரும் மொழிந்ததொரு சாபமதால் |
| |
| கர்த்தன் கிருபையினால் கட்டுப்பட வேணுமினி |
| கள்ளனுமே யான்தான் கட்டுமென்றார் காத்தவனார் |