|
| வெள்ளிமலை நாதரருள் காத்தவனார் |
| உலகம் விளங்கத் தோன்றி |
| |
| துள்ளிவிளை யாடிய சங்கப் |
| பிள்ளையிடம் வந்தருளித் தெளிவனாகி |
| |
| தெள்ளமுதாய் வளர்ந்தருளும் மாலையரைக் |
| களவுதனில் திருடிப் போன |
| |
| கள்ளனுமே யானெனவே காத்தவனைச் |
| சேப்பிளயான் கட்டி னானே. |
| |
| |
| மைந்தனெனும் காத்தவனை வந்துதான் சேப்பிளையான் அந்தமுள ஓர்கையிலே அன்புடனே மாலைகொண்டு மாலையரைத் தொட்டணைந்த வலதுகையில் மாலைகொண்டு காவலனும் கட்டிக் கடுகி நடந்தானே. |
| நடந்தனன்காண் காத்தவனும் முன்நடக்க |
| நாடிவந்த சேவகர்கள் பின்நடக்க |
| |
| தொடர்ந்தனன்காண் சேப்பிளையான் மாலைகொண்டு |
| துரந்திரனைக் கைப்பிடித்தே ராசன்முன்னே |
| |
| அடர்ந்தனன்காண் ஆரியப்பன் கொலுமுன்பாக |
| அடிபணிந்து அரசனுட சமுகந்தன்னில் |
| |
| படர்ந்தனன்காண் காத்தவனைச் சபையோர்முன்னே |
| பாருமையா என்றுமவன் பகருவானே. |
| |
| |
| வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் அரசுகாவல் சேப்பிளையானே இந்தக் காத்தவராயன் மகாசுத்த வீரனாச்சுதே உன் கையில் எப்படி அகப்பட்டான். |
| பதினாறு அடி விருத்தம் |
| கச்சியுமை பங்காளர் பார்வதியாள் பெற்றிடும் |
| காத்தவ ராயன் வந்தான் |
| |
| கலியுகம் விளங்கிட அவதார மதுசெய்த |
| கலியுக வரதன் வந்தான் |