|
| பச்சமலை பதிகொண்ட பார்வதியாள் பெற்றிடும் |
| பரிமள ராயன் வந்தான் |
| பாங்கான வயிரசெட்டி பாளையம் பதிகொண்ட |
| பச்சைக் கழுவன் வந்தான் |
| |
| உச்சித மாகடவ பக்தர்வினை தீர்த்திட |
| உவந்து அவனும் வந்தான் |
| ஓங்காளி கையினில் கிண்ணரி தமுரும்பெற்ற |
| ஓங்கிதிரு லோலன் வந்தான் |
| |
| அச்ச மில்லாமலே ஆரிய மாலையை |
| அணைந்த போசன் வந்தான் |
| அழகான பெண்கொடி ஓந்தாயி தன்னையும் |
| அரும்சிறை யெடுத்து வந்தான் |
| |
| வச்சிரகிரி மேவுவேன் வரைத்தாசியர்கள் மோகிக்க |
| வாது கூறிடவே வந்தான் |
| மகராசனாகவே அரசு காவலுங் கொண்ட |
| மாணிக்க ஓளியன் வந்தான் |
| |
| இச்சையுடன் யானுமே ஆசையாய் தேடிட |
| எங்கள்துரை வீரன் வந்தான் |
| என்னாளும் என்னருகில் எப்போது மிருக்கவே |
| ஈசனருள் பெற்று வந்தான் |
| |
| தட்சரூபங் கொண்டு பூவாயி மனைதனில் |
| தானுமது உண்டு வந்தான் |
| சந்தோஷ மாகவே என்கையில் கட்டுண்டு |
| சமுகத்தி லெதிரே வந்தான் |
| |
| நிச்சய மாக என்னாளும் பாச்சூரில் |
| நின்று கழுவேற வந்தான் |
| லீலா விநோதனே நிருபனவன் சமுகம் |
| நேரிடக் காத்தான் வந்தான் |
| |
| தனமுடைய அருமலர்கள் தொழுதேத்தும் |
| ஆரியப்பா தனசேகர சிங்காரனே |