|
ராசனும் கொலுவி ருந்து |
நலமுடன் காத்தான் தன்னை |
நேசமாய் உனக்கு இப்போ |
நீணிலத் தரசு காவல் |
வாசமாய் தந்தோம் நீயும் |
வகையுடன் நடக்கை தப்பி |
பாசமாய் மறையோர் பெண்ணை |
பரும்சிறை எடுக்க லாமா? |
|
|
வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே நீர் முன்னாலே செய்த குற்றமெல்லாம் பொறுத்து உன்னை மேலாக வைத்திருக்கும் பிர்ம குலத்திலே பிறந்திருக்கும் ஆரியமாலையை சிறையெடுக்கலாமா சொல்லும் பிள்ளாய் காத்தவராயனே. |
|
மெய்யனே உலகம் தன்னில் |
வேந்தர்க்கு வேந்தா கேளாய் |
வையகம் தன்னில் பிரமன் |
வகுத்திடும் படியாய் தோன்றும் |
|
வெய்யவே வரும் பொருட்டை |
ஒருவனால் விலக்கப் போமோ |
அய்யனே கேளு மென்று |
அடிபணிந் துரைசெய் தாரே. |
|
நடை |
நாட்டுப்பாடல் |
ஆரியப்பூ ராசாவேஎன் ஆண்டவனே கும்பிடுறேன் |
காரியமாய் கேட்டருளும்என் கர்த்தாவே சொல்லுகிறேன் |
|
தேசம் அறிந்திடவே செய்தகுற்றம் நீர்பொறுத்து |
வாசமுடன் எந்தனுக்கும் மனது பிரியதமாய் |
|
பாதிகாவல் எந்தனுக்கு பகுத்தீரே ராசாவே |
சாதி மறையோர்கள் சரியென்று சொல்லிடவே |
|
பெத்த தகப்பனினும் பிரபலமாய் எந்தனுக்கு |
புத்தியது சொன்னீர்காண் புண்ணியரே உம்மாலே |
|
எண்ணி வருங்கருமம் எப்படியோ நீரறிந்து |
சொன்னீர்காண் புத்தியது தோஷமில்லை என்பேரில் |