பக்கம் எண் :

56காத்தவராயன் கதைப்பாடல்

முப்பத்து முக்கோடி தேவர் முதலாக
நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்கள் தன்னுடனே
 
அன்ன காமாக்ஷியரை அடிவணங்கித் தெண்டனிட்டு
தென்கைலை வாழும் சிவனாரைத் தெண்டனிட்டு
 
அம்மான் திருமாலை அடிவணங்கி தெண்டனிட்டு
தாக்கமுள லெக்ஷ்மியை தானே அடிபணிந்து
 
தொழுது வணங்கியையன் துய்யோனும் ஏணிவழி
பழுதாலே தானேறி பார்க்கக் கழுமுனையில்
 
அன்றுதான் சேப்பிளையான் அண்ணாந்து பார்த்துநின்று
கண்டுதான் மைந்தனையும் கண்ணீர் சொரிந்தருளி
 
என்றுனைக் காண்பேன் என்கண்மணியே என்றழுதான்
 
பிள்ளையில்லாப் பாவியு நானுனை யெடுத்துப்
   பிரியமாக வளர்த்தே னப்பா
 
கள்ளவிழி மாலையி னால்கழு வேறிப்
   பதம்பெறவும் காண்போ ராகி
 
தெள்ளமிர்தமே கொடுத்தாள் அவளும் நானும்
   தெரியநின்று தயங்கு கின்றோம்
 
உள்ளதொரு நல்வாக்கு நீயுரைத் திடுவாய்
   எந்தனுக்கு உயிருங் கொளவே.
 
தகப்பன் சேப்பிளையான் தாயாரும் சங்கப்பிள்ளை
தேசத்துக் கதிபதியாம் தீரனவன் ஆரியப்பபன்
 
இகத்தில் வளர்த்தருளும் என்தகப்பா கேட்டருளாய்
ஈஸ்பரன் கிருபையினால் எடுத்து வளர்த்தாய்நீ
 
சால நல்வாக்கு சாற்றுகிறேன் கேளுமினி
 
நீர்க்குமிழி ஏது நிலைத்த காயமேது
பார்மேல் பிறந்தவர்கள் பரலோகம் சேர்வதல்லால்
 
என்னாளும் பூலோகம் இருப்பார் ஒருவரில்லை
நன்றாக உந்தனுக்கு நானுமிகச் சொல்லுகிறேன்
 
காமாக்ஷி வாசலுக்கு காத்தானென்று பேரும்பெற்று
காமாக்ஷி வாசலுக்கு நல்பதியே உண்டுபண்ணி