|
| கலியுக தேசமதில் காத்தவ ராயனென்று |
| நலியாமலே கழுவில் நானேறும் போதளவும் |
| |
| உன்கையால் கட்டுண்டு உலகத்தோர் கொண்டாட |
| உன்கையால் கட்டிடவும் சத்தியமாய் உந்தனுக்கு |
| |
| ராச வரிசையாய் ராசாக்கள் மெச்சிடவே |
| ஆசையாய் உந்தனையும் அனைவோரும் சூழ்ந்துவர |
| |
| மாலை கழுத்திலிட்டு வாண மத்தாப்புடனே |
| ஆலயங்கள் எல்லாம் ஆணழகம் சேப்பிளையான் |
| |
| காருலவும் பெருங்கடல் கடல்சூழ்ந்த வையகமும் |
| பேருள்ள மட்டும் பெருமைகள் கொண்டாட |
| |
| இப்பூமி தன்னில் என்பேர் விளங்குமட்டும் |
| செப்பமுடன் உன்பேரு செலுத்திவைப்பேன் என்றுரைத்தார் |
| |
| |
| உலகமதில் காமாக்ஷி சாட்சி யாக |
| உந்தனுக்குப் பிள்ளையென்று உலகம் சொல்ல |
| |
| நலம்பெறவே உன்குலத்தை வளர வைத்து |
| நெறியுடனே மாலையரை சிறையெடுத்து |
| |
| சிலையழக னாகவுந்தான் உந்தன் கையில் |
| சிக்கியுமே கட்டுக்குள் அடக்க மாக |
| |
| தலைவனென்று இச்சமயம் உன்பேர் சொல்லி |
| சதிர்கட்டிக் கழுவேறித் தழைப்பே னென்றார் |
| |
| |
| |
| வசனம் : ஆகோ கேளும் என்னை வளர்த்த கடமைக்காக நான் சொல்லிய வாக்கின்படியே காமாக்ஷி கிருபையால் நடப்பது நிச்சயம் உம்முடைய வீடுபோய்ச் சேருமென்று என்னவிதமாக வாழ்த்துகிறார் பார். |
| |
| |
| அச்சாலே தலைவர் அருள்காளிக் காதேவர் |
| |
| ஆணைக்கொல்லன் ஆசாரி அடிதொழுது தூண்டிதனை |
| நாணயமாய் என்கழுத்தில் நலமாகச் சூட்டென்றும் |
| |
| மானைத் துதித்து மகாதேவர் சொற்படியே |
| கொண்டுவந்து சூட்டுமென்று கூப்பிட்டார் காத்தவனார் |