|
ஆண்டியுட சாபமதால் மாலையரை சிறையெடுக்க |
அரனார் சாபம் |
|
வேண்டியுடன் மணமுடித்தேன் வேதியர்கள்சபையில் |
விரைந்து சென்று |
|
தாண்டி முறை கேட்டசனம் எந்தனுக்குக் கழுவேற |
தயவு செய்தார் |
|
தூண்டிகொண்டு ஆசாரி எந்தனுக்கு மிடரிருக்க |
சூட்டுவாயே |
|
|
சூட்டிடவே வாருமென்று சூரனவர் தானழைக்க |
மாட்டிடவே வாருமென்று மகறாசன் தானழைக்க |
|
ஆசாரியான் தொழிலாளர் அனைவோரும் வாழ்கவென்று |
ராசனவர் ஆரியப்பன் நாட்டிலுள்ளோர் தான்வாழ்க |
|
எல்லோரும் வாழியென இறையோனருள் பெறவே |
நல்லோரும் வாழ்க நாடுதழைக்க வென்று |
|
தொங்குகின்ற தூண்டிதனை தூய்யோனிடத்தில் வைத்து |
அங்குமந்தச் செங்கல்தனை அடுக்கி யிருப்பதனை |
|
தம்முடைய காலாலே தள்ளி அப்புறத்தே |
|
அண்ணாந்த பார்வையோ ஆதிசிவன் சொற்படியோ |
நின்றாரே காத்தவனார் நேராய்க் கழுமுனையில் |
|
மழுதனை ஏந்துங்கையால் மாதங்கி தவத்தினாலே |
பழுதறப் பாரிலேதான் பாங்குடன் மாலைதன்னை |
|
தொழுதிட சிறையெடுத்து துண்டியின் இடத்தில் வைத்து |
கழுதனில் வீற்றிருந்தான் காத்தவ ராயன்தானே |
|
கழுவில் இருப்பதனை கண்டந்த மானிடர்கள் |
அழுத கண்ணோடு அவர்கள் புலம்பிடவே |
|
பார்த்த பேரெல்லாம் பாபமி தென்று சொல்லி |
ஏத்த பேரெல்லாம் இதுபுதுமை யென்றுசொல்லி |
|
கண்ட பேரெல்லாம் கண்ணீர் சொரிந்தடவே |
அண்டையிலே நின்றவர்கள் எல்லோரும் போனார்கள் |