|
| இப்படி மூன்று நாளும் |
| இயல்புடன் இருக்கக் கண்டு |
| சொற்படி முன்னால் வந்த |
| தோகையும் நல்ல தங்காள் |
| |
| நெல்படி தானும் வாங்கி |
| நேர்மையாய் மோரு கொண்டு |
| கல்பிழை யாகப் போக |
| காத்தவ ராயன் கண்டார். |
| |
| இடையர் குலந்தனிலே இயல்பான நல்ல தங்காள் |
| நடையழகி யாகியதோர் நல்லதங்காள் மோரு கொண்டு |
| |
| போவதையும் கண்டு புகழ்பெரிய காத்தவனார் |
| ஏவியே மந்திரத்தை இயல்பான கன்னியிடம் |
| |
| மந்திரமென்னும் வலையை அவள்மேல் வீசிடவே |
| அந்தரத்தின் மேலிருந்து அழைத்தாரே கைகாட்டி |
| |
| கண்டு மதிமயங்கி கன்னியவள் நல்லதங்காள் |
| அண்டிக் கழுவடியில் அண்ணாவே என்னரசே |
| |
| இந்தக் கழுமுனையில் இருந்துமக அண்ணாவே |
| அந்த முடனென்னை அழைத்த விபரமென்ன |
| |
| சொல்லுகிறேன் தங்கையரே தோகையரே மேல்பிறப்பே |
| தெள்ளமையால் மாலையரை சேர்ந்து கழுவிருந்தேன் |
| |
| இருக்கிறேன் தங்கையரே எந்தனுக்குத் தாகமது |
| பொறுக்கவில்லை எந்தனுக்கு பெருந்தாக மேதணிய |
| |
| அடிமேல டியைவைத்து படிமேலே காலைவைத்து |
| துடியாக மோர்கொடம்மா தோகையரே என்பிறப்பே |
| |
| காத்தவனார் சொல்ல கன்னியவள் நல்லதங்காள் |
| ஏத்தமுள்ள அண்ணாவே இந்தாரும் ஏறுகிறேனென்றாள் |
| |
| பருத்தமுடன் நல்லதங்காள் பரிவுடனே மோர்கொடுக்க |
| பரிமண முந்தான் |
| |
| சித்தமுடன் மோருண்டு களைதீர்ந்து இளைப்பாறி |
| உயிர்தெளிந்து சொல்வார் |