பக்கம் எண் :

60காத்தவராயன் கதைப்பாடல்

அத்தருடன் இந்நெறியது உரைப்பேன் தோகையரே
   அருளக் கேளும்
 
புத்தியுடன் மனைக்கேகு என்று சொல்ல மங்கையரும்
   போயினாளே.
 
பானைநிறைய நெல்லாய் பலநெல்லாய் உண்டுபண்ணி
மானிளையைப் பார்த்து வாழ்த்துகிறார் காத்தவனார்
 
மோர்கொடுத்த நல்லதங்காள் முத்தியது பெற்றிருக்க
பால்கொடுத்த நல்லதங்காள் பாக்கியங்கள் பெற்றிருக்க
 
தாகம் தணித்தவர்கள் சந்நிதியுங் பெற்றிருக்க
தாகம் தணிந்ததுபோல் அவர்கள் மிகவாழ்க
 
மாடு பெருகிவர மனைவி மக்களுண்டாக
ஆடு பெருகிவர அழிவில்லாச் செல்வமது
 
பட்டி பெருகிவர பாக்கியங்கள் உண்டாக
கட்டுக் குலையாமல் காலியது பெருகிவர
 
வாக்குப் பலிக்குமென்று வாழ்த்தினார் காத்தவனார்
பாக்கிய லஷ்மியும் பகுந்து குடியிருக்க
 
போனாள்காண் நல்லதங்காள் போய்புகுந்தாள் தன்வீடு
மானாளும் போனவுடனே மங்கை அவள்தனக்கு
 
அங்கமெலாம் நொந்து ஆக மனதெழும்பி
தங்கப் பரிமணமும் தானிருக்கும் வாரதுபோல்
 
அங்கு கழுப்போல அவளிருந்தாள் அம்மானை
 
நாடறியக் காத்தவனார்
   ஞாலமதில் கழுவிருக்க
   நவிலும் சொர்க்கம்
 
தேடறிய பன்னிருவர்
   சித்தர்களும் திரண்டுவந்து
   சிறந்து பார்த்து