பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்61

ஆடறிய பரிமளத்தை
   உயிர்பிடித்துப் போவமென்று
   அருமை யான
 
லாடர்களும் கழுவடியில்
   சுற்றிவந்து கழுவடியை
   நாடினாரே.
 
உயிரைப் பிடிக்கவென்று ஓடிவந்த லாடர்களை
மயிரில் துரட்டிகொண்டு மாட்டி யிழுப்பதேபோல்
 
தம்முடைய மந்திரத்தால் சகலமுனி லாடர்களை
அவ்விடம் விட்டேகாமல் அமர்த்தினார் காத்தவனார்
 
செய்து மிருக்கையிலே தேசிமடம் தானேறி
பொன்சட்டை தான் தரித்து பொன்னால் தடியதுவும்
 
கத்தியும் கட்டாரியும் கனமான ஆயுதமும்
வெற்றியுடன் வெண்புரவி மேலேறி ஆரியனும்
 
காரியமாய் தானென்று கைகாட்டிக் காத்தவனார்
ஆரியனே வாருமென்று அவனைமிக ஏதுரைப்பார்
பாரில் நல்ல தூண்டியிலே படுந்துயரம் தீர்ந்திருக்க
 
கத்தியால் தானே கழுத்தறவே வீசுமென்றார்
மெத்தெனவே கேட்டு வீசினார் ஆரியனும்
 
கத்தி கழுத்தில்விழ காமாக்ஷி நாயகியும்
அத்தருடனே வந்து அழகான கழுவடியில்
 
காத்தவனார் கழுவேற ஆரியன்தான்
   கழுத்தறவே வீசிடவே மாலையாக
போற்றியே புகன்றிடவும் கண்டுதேவர்
   புரந்தரனார் விடையேற்றி பூவையாளும்
 
தோத்தரித்துக் கழுவிருக்கம் பரிமணத்தை
   தூக்கியிரு கரத்தாலே மடிமேல்
வைத்தகற்றி இச்சடலம் விட்டுநீயும்
   ஆயிழையா ரெழுவருடன் வருகுவாயே.
 
கன்னியர்கள் தனைக்கூட்டி வாருமென்று
   காமாக்ஷி புகன்றிடவே காத்தான் தானும்
உன்னிதமாய் ஆரியனைக் கழுவிலேற்றி
   உந்தனுக்குமுன் ஊட்டிப் புசிப்பே னென்று