|
மென்னியையே பிடிக்கவந்த லாடர்தன்னை |
வாருமென்று சடத்தை மறித்துப் போட்டு |
நன்னியே மோர்கொடுத்த நல்லதங்காள் |
தனையழைத்து மாலையிடம் நடந்தாரையன். |
|
காத்தவனார் மாலைசென்று பாரில் புக்கி |
கனிவுடனே நடந்தவகை யெல்லாம் சொல்லி |
நேத்தியாய் சடலமதை மறித்துப் போட்டு |
நிமிஷம்வர வேணுமென்று ஐயர்கூற |
|
வாழ்த்தியே கூடதனை விட்டு மாலை |
வயிரசெடடி மகளுடனே வந்து சேர |
பூத்த பூவாயி சவுதாயி நல்லி |
புகழ்கருப்பாயி எழுவருடன் புக்கி னாரே. |
|
அரனார் உமையாளும் அன்பாய் விடைகொடுக்க |
திறமான ஆரியனை சிறந்தகழு மேலேற்றி |
|
வரமும் அவர்களுக்கு வாக்கும் கொடுத்தருளி |
தரமுடைய லாடர்களை சகலகன்னி மாடர்களுடன் |
|
இச்சடலம் விட்டு இயல்பான தேவதையை |
மெய்ச்சடலம் விட்டு வெளிப்பட்டார் அம்மானை |
|
சட்டை முறித்து வைத்து சர்ப்பம் நடப்பதுபோல் |
இட்டமுடன் சிப்பிதனில் இருந்ததொரு முத்துதனை |
|
திட்டமுடன் சங்கதனில் சேர்த்துப் பதிப்பதுபோல் |
விதையதனை எடுத்து நடுவது போலாக |
|
ஊத்தைச் சடலமதை ஒளித்துப் புவிதனிலே |
காத்தானும் தன்னுடலை சுழித்தாரே பாரதனில் |
|
தூலத் தடக்கி சூருமதில் உள்ளடக்கி |
காலத்தைப் போக்கி கழித்தார் உடலுமதை |
|
பத்திர காளியுடன் பார முனித்திரனும் |
உத்தமனாய் சென்று உகந்திருந்தார் பச்சமலை |