தங்களையறியாமல் பாடிவிட்டார்கள். முத்துப்பட்டன்
திரும்பி வழி மறித்தான்.
2.
பெண்கள் ஓடிப்போய் தங்கள் தகப்பனிடம் நடந்ததைக்
கூறினார்கள். அவன் தன் பெண்களோடு வந்தான். மூர்ச்சையாகிக் கிடக்கும்
பட்டனைக் கண்டான். பட்டன் எழுந்து வாலப் பகடையிடம் அவர்களை
மணம் செய்து வைக்கக் கோரினான். வாலப்பகடை இத்தகைய
திருமணத்திலுள்ள கஷ்டங்களை எடுத்துச் சொன்னான். பட்டன்
பிடிவாதமாகக் கேட்கவே பகடை தங்கள் பாஷையைப் படிக்க வேண்டும்,
தொழிலைக் கற்க வேண்டும். தங்களுடைய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற
வேண்டும்-என்று நிபந்தனை விதித்தான். இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற
நாற்பது நாள் தவணை விதித்தான். சரி யென்று பட்டன் ஒப்புக் கொண்டான்.
இவ்விஷயத்தில்
கவிராயர் சொல்லும் கதை சற்றே வேறு
விதமாயிருக்கிறது. அவர் சொல்வது ; பெண்களைப் பின் தொடர்ந்த பட்டன்
பகடைகளிடமே நேரில் போய்ச் சேர்ந்தான். அவர்கள் அவனை
வரவேற்றனர். உடனே மான் துறைக்கிடை என்ற இடத்தில் திருமணம்
நடந்தது.
இது
இயற்கைக்கு விரோதமாகக் காணப்படுகிறது. விவாதம்
எதுவுமில்லாமல் பகடை பெண் கொடுக்க எப்படிச் சம்மதிப்பான்? எப்படி
நம்புவான்? மூலக்கதை சொல்லும் நாற்பது நாள் கெடு விதித்ததுதான்
நம்பத்தகுந்ததாக உள்ளது.
3.
வாலப் பகடை மூன்று வருஷங்களுக்குப்பின் இறந்து போனான்.
அவனோடு அவனுக்கு உதவியாகப் பட்டன் தொழில் செய்து வந்தான்.
செருப்புத் தைத்தான். கிடையைக் காவல் புரிந்தான். துஷ்டமிருகங்களால்
சல்லியம் இல்லாமல் அவற்றைத் தனது நண்பர்களோடு வேட்டையாடிக்
கொன்றான். பகடைக்குப் பின் இவனே தலைவனானான். பட்டவராயன்
என்று பெயரும் பூண்டான். மலையாளத்துக்குப் போகும் பொதிமாட்டுப்
பாதையை வணிகர்களுக்காகப் பாதுகாத்தான். கள்வர் பயமும்,
துஷ்டவிலங்குகளின் உபத்திரவமும் இல்லாமல் வணிகர்களின் வியாபாரப்
போக்குவரத்துக்கு வசதி செய்து, அவர்கள் தங்கவும் வசதி செய்து
கொடுத்தான். அவ்விடம் குறுப்பிலாக்காவு என்று அழைக்கப்படுகிறது.
குறும்பில்லாத காடாக அவ்விடத்தை அவன் மாற்றினான். சிறிது
காலத்திலேயே புகழ் பெற்றான்.
அச்சுப்பாட்டில்
கலியாணமான அன்றே அவன் இறந்ததாக
சொல்லப்படுகிறது. முத்துப் புலவரின் கதைதான் உண்மையாக
|