திம்மக்காள் மற்றும், இதர கதாபாத்திரங்களான
வாலப்பகடை, பட்டனின்
சகோதரர்கள், வன்னியர்கள் ஆகியோரின் பண்புகளை மூன்று மூலங்களும்
ஒரே விதமாகத்தான் சித்தரிக்கின்றன.
இவற்றின்
காரணம் என்ன? வில்லுப்பாட்டு உழைக்கும் மக்களின்
சிருஷ்டி, கர்ணபரம்பரைச் செய்திகள் உழைக்கும் மக்களிடையே வழங்கி
வருவன. அச்சுப் பிரதியும், இவைகளுக்கு முரண்படாத கதைப் போக்கைக்
கொண்டுள்ளது. உழைப்பாளி மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளை எந்தக்
கண்ணோட்டத்தோடு கண்டார்களோ மனித இயல்புகளை எவ்வாறு
மதிப்பிட்டார்களோ, அதே அடிப்படையில்தான் இம்மூன்று மூலங்களும்
மதிப்பிடுகின்றன. ஆகவே தான் கதா பாத்திரங்களின் இயல்புகள் மூன்று
மூலங்களிலும், ஒன்று போல் வருணிக்கப்பெற்றுள்ளன.
முத்துப்பட்டன்
இயல்பு
வில்லுப்
பாட்டு முத்துப்பட்டனின் குண நலங்களை எப்படி
மதிப்பிடுகிறது? அவன் சக்கிலியப் பெண்களை மணந்து கொண்டதால்
அவனைச் சாதி கெட்டவன், முறைமை கெடுத்தவன், சண்டாளன் என்று
ஏசுகிறதா? அல்லது அவனது மனிதத்துவத்தையும், துணிவையும் உறுதியையும்,
தியாகத்தையும் போற்றுகிறதா?
வில்லுப்பாட்டு அவனது பெயரைக்
குறிப்பிடும் இடத்தில் எல்லாம்
அவனைப் புகழ்ந்து பேசுகிறது. உதாரணமாக சத்திய வான்முத்துப்பட்டன்,
ஏற்ற ஆரிய முத்துப்பட்டன்,
சோதிமுத்து, பேர்
அழகன்முத்துப்பட்டன், உத்தமமுத்துப்பட்டன், சுவாமி
முத்துப்பட்டன்
என்றே பேசுகிறது. அவனை முன்பின் காணாத வாலப்பகடை அவனை முதன்
முதலில் கண்டதும் இந்திரனோ, தேவனோ, மன்மதனோ, மாயனோ, ஏகச்
சக்ராதிபனோ? என்று நினைக்கிறான், வில்லுப்பாட்டு முதலிலிருந்து கடைசி
வரை முத்துப்பட்டனைப் போற்றியே பேசுகிறது.
அவ்வாறு
போற்றுவதற்குக் காரணமான இயல்புகள் எவை?
முதலிலேயே வில்லுப்பாட்டு அவனது கல்வி அறிவைப் பற்றிக் கூறிவிட்டு,
அவன் சத்தியவான் என்றும் கூறுகிறது. சத்தியவான் முத்துப்பட்டன்
தமையன்மாரோடு சண்டை செய்து பிறந்த ஊர்தனைக் கடந்து பிற ஊரில்
போய்ச் சேர்ந்தான் என்று சொல்லுகிறது. தமையன் மாரோடு முத்துப் பட்டன்
ஏன் சண்டை செய்தான் என்ற காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.
ஆயினும் சத்தியவான், தமையன்மாரோடு சண்டை செய்வதற்கு என்ன
காரணம் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். அவர்கள் படித்த படிப்பும்,
அவர்களுடைய அறிவும்
|