பொய்ம்மையின் சேவைக்குப் பயன்பட்டன
போலும் ! அதனால் தான்
முத்துப்பட்டன் குடும்பத்தை விட்டுக் கொட்டாரக் கரைக்கு வந்துவிட்டான்.
இந்தச் சம்பவம் அவன் உண்மைக்காக உறுதியாக நிற்பான் என்பதை முன்
கூட்டிச் சூசகமாக அறிவிக்கிறது.
அவனுடைய
வாழ்க்கையில் புதிய தடத்தை ஏற்படுத்துவது அவனது
காதல். இக்காதல் தொடங்கும் கட்டத்தை வில்லுப்பாட்டு சிறந்த கலை
உணர்வோடு கையாளுகிறது. பூஜை செய்து கொண்டு இருந்த பட்டன்,
பெண்கள் பாடும் ஓசையைக் கேட்டான். சக்கிலிச்சி என்ன பாட்டுப்
பாடுவாள்? பாரதி கூட்ட முதப் பாட்டு என்று வர்ணித்தாரே, அந்தக்
கும்மியா? சுண்ணம் இடிக்கும் பாட்டா? பள்ளியர் பாட்டா? தெம்மாங்கா?
எந்தப்பாட்டென்று வில்லுப்பாட்டு சொல்லாவிட்டாலும் அது நிச்சயமாக ஒரு
நாட்டுப் பாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும். முத்துப் பட்டன்
பிராமணன். இதுவரை இம்மாதிரியான பாட்டைக் கேட்டிருப்பானோ.
என்னவோ? படிப்பாளியான அவன் உழைப்பாளி மக்களின் நாடோடிப்
பாடலைக் கேட்டு அதில் மனம் பறிகொடுத்தான்.
முதன்
முதலில் உழைப்பாளி மக்களின் கலை அவனது உள்ளத்தைக்
கவர்ந்தது. பின்னர்தான் உழைப்பாளி வர்க்கப் பெண்கள் அவனது
உள்ளத்தைக் கவர்ந்தார்கள். அவனது உள்ளத்தில் தோன்றிய காதல் இன்று
பெருகி நாளை வற்றும் காட்டாற்று வெள்ளம் அல்ல. வாழ்க்கை முழுதும்
நிலைத்திருக்கக் கூடிய, வாழ்க்கையில் எத்தகைய தியாகத்தையும், பெரிதாகக்
கருதாத ஆழ்ந்த உணர்ச்சி அது. வாலப்பகடை தனது மக்களை மோசம்
செய்ய வந்த பார்ப்பானை, இரண்டு துண்டாக வெட்டுவேன். என்று
கத்தியைக் காட்டிச் சொல்லும்போதும் முத்துப் பட்டன் உயிருக்கு
பயப்படவில்லை. தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை,
தாயுடன் கூடப் பிறந்த ஆசை அம்மானே
சமர்த்திகளுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்தேனே
பூசை விட்டு பொருள் விட்டு என் மனந்தானே
பெண்ணாசைப்பட்ட பாவி நானே
தாய் வெறுத்தேன் தமையன் இழந்தேன்
உன் மக்களை நான் வெறுத்தால்
எந்தன் உயிர் மாண்டிடுந்தானே
பேய் பிடித்தானைப் போலாகி விட்டேன் |
|