நான்
பிழையேன் சக்கிலியா, உன் மக்களை
நாலுபேர் அறிய மாலை சூட்டிவைப்பாய் நாளை |
இவ்வாறு
பட்டன் கோபமாக இருக்கும் வாலப் பகடையிடம்
கூறுகிறான். அவனது துணிச்சலையும், மன உறுதியையும் கண்டு வாலப்
பகடைக்குக் கோபம் தணிகிறது. இவ்விவாகம் நடைபெறுவதற்கு
இடையூறாகவுள்ள காரணங்களையெல்லாம் வாலப்பகடை முத்துப்பட்டனிடம்
எடுத்துக் கூறுகிறான். தங்களுடைய இழிவான வாழ்க்கையைப் பற்றி
வருணித்து அது பிராம்மணனுக்கு ஏற்புடையதாகாது என்று சொல்லுகிறான்.
ஆனால்
முத்துப்பட்டன் மனம் மாறவில்லை. அவனது மனத் திண்மை
தளரவில்லை. அவன் உறுதியாகச் சொல்லுகிறான்.
கோடி கோடி தர்மமுண்டு
உனது மக்களை
சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால்,
சகல தொழிலும் உங்கள் கூடச் செய்வேன் நான்
தாய் மாமன் அல்லவோ இன்று முதலுக்கு,
சாதி சனம் போலே நின்று வாரேன் குடிலுக்கு. |
வாலப்பகடை இத்திருமணத்திற்கு நிபந்தனைகள்
விதிக்கிறான். முத்துப்பட்டன
சக்கிலியர்களைப் போலவே உடை தரித்துக் கொள்ளவேண்டும். தோல்வார்
இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். குடுமியை சிரைத்து விடவேண்டும்.
பூணூலை அறுத்தெறிய வேண்டும். நண்டுக்கறி உண்டு, கள் குடிக்க
வேண்டும். தினந்தோறும் ஒரு சோடி செருப்புத் தைத்துக் கொடுக்கவேண்டும்.
ஆடு மாடு மேய்த்து வரவேண்டும்.
எல்லா
நிபந்தனைகளையும் முத்துப் பட்டன் ஒப்புக் கொள்ளுகிறான்.
தமது குலப் பெருமையின் அடையாளங்களான பூணூலையும், குடுமியையும்
நீக்கிவிடுகிறான். கணுக்கால்வரை தாழ்ந்திருக்கும் வேட்டியை முட்டுக்கு மேல்
உயர்த்திக் கட்டிக் கொள்ளுகிறான். தனது காதலியருக்காக சாதி மேன்மை
உணர்வை ஒதுக்கித்தள்ளுகிறான். அது மட்டுமல்ல, இச் செயல்கள், ஏமாற்றும்
வெளிப்படைச் சின்னங்களைக் கைவிட்டு அவன் உழைப்பவர் இனத்தில்
ஒன்றாக முனைந்து விட்டான் என்பதற்குச் சான்றுகள். இவை வெளிப்படை
அடையாளம் மாத்திரமல்ல. அவன் அவர்களுக்கு இடையூறு நேர்ந்தபோது
உயிர் விடவும் தயாராகிறான். உடல் நலமின்றி இருந்தும் தனது இனத்தாரின்
விரோதிகளை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடி உயிர் நீத்தான்.
|