பக்கம் எண் :

கதாபாத்திரங்களின்
இயல்புகள்
23

     மானிடப் பேருணர்வின் சிகரமாக அவனை உழைப்பாளி மக்கள்
போற்றினார்கள். இன்றும் போற்றி வருகிறார்கள். இத்தகைய மானுடத்தின்
சிறந்த பிரதிநிதியாகவே வில்லுப்பாட்டு முத்துப்பட்டனைச் சித்திரிக்கிறது.

மனைவியர் இயல்பு

     பொம்மக்காவும், திம்மக்காவும் பட்டன் மீது காதல் கொண்டனர்.
ஆனால் அவன் அவர்களை அணுகிப் பேசும் பொழுது தங்கள் சாதிச்
சிறுமையைக் கூறி அவ்வேண்டு கோளை மறுத்தனர்.

“சாம்ப சிவ நாதர் போலிருக்கிறீர் சாமி
சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி”

என்று அவர்கள் கூறுகிறார்கள். கீழ் சாதிக்காரிகள், மேல் சாதிக்காரனை
மணம் செய்து கொள்வது தர்மம் அல்ல என்றும், தர்மம் தப்பினால் பூமி
பொறுக்காது என்றும் அவர்கள் நம்பினார்கள். உள்ளன்பு அவன்மீது
இருந்தபோதிலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் தங்கள் தகப்பனுக்குத்
தெரிந்தால் மோசம் வரும் என்று பயமுறுத்தினார்கள். ஆயினும் தங்கள்
தகப்பன் விதித்த நிபந்தனைகளை எல்லாம் பட்டன் ஒத்துக் கொண்டு
நிறைவேற்றி வைத்து அவர்களை மணம் செய்ய வந்த போது அவர்களது
மனம் பூரித்தது. மனம் ஒத்த தம்பதிகளை வாழ்த்தி,

“மன்மதனும் ரதி தன்மையும் போலவே
வகுத்தானே பாவி பிரம்மனுந்தான்”

என்று சக்கிலியப் பெண்கள் கும்மி அடிக்கிறார்கள். இப்பொழுது
பொம்மக்காளும், திம்மக்காளும், தங்களுடைய திருமணத்தை தர்மம்
தவறியது என்று கருதவில்லை. தங்கள் குல ரட்சகனாகவே பட்டனைக்
கருதுகிறார்கள். அவன் மறவர்களோடு சண்டைக்குப் போகும் பொழுது
அவர்கள் அவனைத் தடுத்தது அவர்களது அன்பைத் தெளிவாகக்
காட்டுகிறது. அவன் மறுத்த பொழுது தாங்களும் அவனோடு வருவதாகச்
சொல்லுகிறார்கள். இது அவர்களுடைய வீரத்தையும் காட்டுகிறது.
முத்துப் பட்டன் சண்டைக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அவர்கள் பல தீய
கனவுகள் காண்கிறார்கள். அவற்றுள் ஒன்று “குடிசையில் தீப்படவும்,
கொட்டாரம் வைக்கவும் கனவு கண்டேன்,” என்பது. இதனால்
உக்கிரங் கோட்டை ஜமீன்தாரது சூழ்ச்சியால் தான் கணவனுக்கு
இச் சங்கடங்கள் நேரும் என்று தோன்றுகிறது. கணவனைத் தேடிச்
செல்லும்போது அவர்கள் பாடும் சோக கீதமும் அவனது உடலைக் கண்டு
அரற்றி அழும் ஒப்பாரியும் உருக்கமாயிருக்கின்றன. திருமணத்திற்கு மூன்று