வருஷங்களுக்குப் பின்புதான் முத்துப் பட்டன்
இறந்தான் என்பதற்குச்
சான்றுகள் உள்ளன. என்றாலும் அவன் திருமணம் ஆன அன்றே இறந்தான்
என்று வில்லுப்பாட்டுப் பிரதி கூறும். பட்டன் மனைவியர்மேல் நமக்கு எழும்
அனுதாபத்தை அதிகமாக்கவே இந்த உத்தியை வில்லுப்பாட்டுப் புலவர்
கையாண்டிருக்கிறார் போலும் ;
கர்ண
பரம்பரைச் செய்திகளும் முத்துப் புலவர் வில்லுப் பாட்டும்
சொல்லாத ஒரு செய்தியை அச்சுப் பிரதி கூறுகிறது. அதுதான் பட்டன்
மனைவியர் இருவரும் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் தீப்பாய உத்தரவு வாங்கச்
சென்றது. இச்சம்பவம் நடந்திருக்கக் கூடியதல்ல என்பதைக் காரணங்களோடு
ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். சிங்கம்பட்டியாருக்குச் சிறப்பு அளிக்க
நினைத்த யாரோ ஒரு புலவர் இதைப் பாட்டில் நுழைத்திருக்கலாம் என்றும்
முன்பே கூறினேன். இப் பகுதி இடைச் செருகலாக இருப்பினும் அதில்
கதைத் தலைவியரின் பண்பு நலன்களைக் குறைத்துக் கூறவில்லை. கணவனை
இழந்த ஏழைப் பெண்களை ஆசை நாயகிகளாக ஆக்கிக் கொள்ள
நினைக்கும் ஜமீன்தாரை முகத்தில் அறைந்தாற் போல் பேசிவிட்டு அவர்கள்
திரும்புவதாகவே இப் பகுதி கூறகிறது. அவர்களுடைய கற்பு நிலையையும்
உறுதியையும் இப்பகுதி பாராட்டவே செய்கிறது.
அண்ணன்மாரது
பண்பு
பாட்டின் ஆரம்பத்திலேயே முத்துப்பட்டனது தமையன்
மார்கள்
அவனைப் போன்றவர்கள் அல்லர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள்
அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்கும் போதுகூட தம்பியை விட
பணத்தின் மீது அவர்களுக்கு ஆசை இருப்பது தெரிகிறது.
பட்டன்
தாகவிடாய் தீர்க்கச் சென்றிருந்த பொழுது அவர்கள்
தங்கியிராமல் விக்கிரம சிங்கபுரத்தில் சந்திக்கும்படி சொல்லிச் சென்று
விடுகிறார்கள். இக்கட்டத்தில் வில்லுப் பாட்டு அவர்களைப் பொருளாசை
கொண்ட பட்டர் என்று கூறுகிறது. கலியாணம் செய்து கொள்ளப் போகும்
செய்தியை அவர்களிடம் முத்துப்பட்டன் சொன்னவுடன் அவர்கள் தங்கள்
குலப் பெருமைக்கு இழிவு வரும் எண்றெண்ணி கல்லறைக்குள் தள்ளி
அடைத்து விடுகிறார்கள். சாதி வெறியும் பணத்தாசையும், அவர்களது
சகோதர பாசத்தைக் கொன்று விடுகின்றன. சாதி கெட்ட பட்டனைக்
கொல்லவும் தயங்காத அவர்கள் பட்டன்
|