சம்பாதித்த பணத்தை மட்டும் வீடு கொண்டு
செல்லத் தயங்கவில்லை. சாதி
உயர்வின் பொய்ம்மையை இக் கூட்டத்தில் வில்லுப்பாட்டு நையாண்டி
செய்கிறது. அச்சுப் பிரதியில் இல்லாத ஒரு பகுதி சில பாட்டுக்காரர்கள்
பாடும் பாட்டில் இருக்கிறது. அதில் பட்டனுக்கும், அவனது
தமையன்மாருக்கும் நடக்கும் சம்பாஷனை அடங்கியுள்ளது. அவர்கள்
சக்கிலியர் இனத்தை, செத்த மாடு தின்பவர்கள், நத்தை தின்பவர்கள் என்று
பழிக்கிறார்கள். பட்டன் அவர்களது இழி நிலைமைக்கு உயர்ந்த சாதிக்
காரர்களே காரணம் என்று வாதிக்கிறான். பசு உயிரோடிருக்கும் வரை ஒரு
சொட்டுவிடாமல் மேல் சாதிக்காரர்கள் உறிஞ்சி விடுவதால் செத்த
மாடுகள்தான் சக்கிலியர்களுக்கு கிடைக்கிறது என்று அவன் சொல்லுகிறான்.
இவ்வாறு உழைப்பவர்களது இழிவு நிலைமைக்கு உயர்ந்த
நிலையிலுள்ளவர்களே காரணம் என்று பட்டன் குற்றம் சாட்டுகிறான்.
வன்னியர் பண்பு
வன்னியர்கள் முத்துப் பட்டனைக் கொன்றவர்கள்.
பசுக்களைக்
கொள்ளை கொண்டு சென்றவர்கள். ஆயினும் அவர்களைப் பற்றி
கண்டனமாக ஆசிரியர் கூற்று எதுவும் இல்லை. பட்டனது மனைவியர் அழுது
புலம்பும் போது தான் சண்டாள வன்னியர்கள் சதித்தாரே கணவரைத் தான்
என்று வருகிறது. எய்தவனிருக்க அம்பை நோவதில் பயனென்ன என்று
பாடகர் கருதினார் போலும் ! ஆயினும் அவர்களில் நேர் நின்று
போரிடாமல் மறைவாக முதுகில் குத்திய வன்னியனைத்தான் சப்பாணி,
நொண்டி, ஒளித்தவன் என்று இழிவாக வில்லுப்பாட்டு சொல்லுகிறது.
கோழைத்தனத்தைத் திருடுவதைவிடப் பெரிய குற்றமாகப் புலவர் கருதுகிறார்.
மற்றைப்படி பஞ்சத்தால் அடிபட்டு கொள்ளை அடிக்கத்
துணிந்தவர்களைஅவர் குற்றம்சாட்டவில்லை.
கதா பாத்திரங்களை மதிப்பிடுவதில்
அவரவர்கள் செய்கையைத்தான்
வில்லுப்பாட்டு அடிப்படையாகக் கொண்டுள்ளது. முத்துப்பட்டனது பரந்த
உள்ளத்தையும், தியாகத்தையும், வீரத்தையும், குடி ஓம்பலையும், வில்லுப்
பாட்டு போற்றிப் பாடுகிறது. தாழ்ந்த சாதி சக்கிலியப் பெண்களின்
அழகையும், இசையினிமையையும், கற்பையும், உறுதியையும் புகழ்ந்து
பாடுகிறது. வாலப் பகடையின் மான உணர்ச்சியையும் முன்யோசனையையும்
அறிவுத் திறனையும், பரந்த மனப்பான்மையையும், பெருமையாக
வருணிக்கிறது. சாதிப்பெருமை பேராசை, குறுகிய மனப்பான்மை ஆகிய
தன்மைகள் கொண்ட முத்துப் பட்டனின் தமையன்மாரை வில்லுப் பாட்டு
கேலி செய்கிறது. பஞ்சத்தில் அடிபட்ட வன்னியர்
|