பக்கம் எண் :

முடிவுரை27

அவர்கள் எப்படிக் காட்டுப் பெண்ணை வீட்டிற்குள் அழைத்துக்கொள்ள
முடியும்? அவனை வீட்டிற்குள் அடைத்துப் போட்டார்கள். தாங்கள் சொன்ன
பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்துரிமை இல்லை
என்றனர். நயத்தாலும், பயத்தாலும் புத்தி சொன்னார்கள். இருமாதங்கள் ஓடின.
இவன் வெளிகிளம்ப முடியவில்லை. பளிச்சி இருமாதங்கள் பொறுத்துப்
பார்த்தாள். வந்தது வரட்டுமென்று ஒரு உறுதியான முடிவுக்கு வந்தாள்.
அவளைக் கண்டால் அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு
இருந்தது. அவனது ஊர் நோக்கி வந்தாள். வழியில் கருணையாறு
குறுக்கிட்டது. அக்கரையில் காதலனது ஊர். ஆற்றில் வெள்ளம். இக்கரையில்
நிலையாக ஒரு பாறைமேல் நின்றாள், அவன் வரக் காணோம். பெற்றோர்
அவளை அக்கரையில் கண்டு மகனை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுப்
பாதுகாத்தனர். அவன் வரவேயில்லை, அவளும் போகவேயில்லை. நின்றாள் ;
நின்றாள் ; நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன அவள் இளமை
மாறிற்று ; வனப்பு அழிந்தது ; முதுமை தோன்றிற்று. கடைசியில் எலும்புக்கூடு
எஞ்சியது.

     இவ்வாறு காதலுக்குப் பலியானவளை “பளிச்சியம்மன்” என்று பெயரிட்டு
வணங்குகிறார்கள். இவளுக்கு கருணையாற்றங்கரையருகே சிலையொன்று
இருக்கிறது.

     இக்கதையில் உள்ளம் ஒன்றுபட வாய்ப்பு இருந்து, காதல் பிணைப்பு
ஏற்பட்டாலும், நிலப்பிரபுத்துவ சாதிப்பிரிவு, அப்பிணைப்பை அறுத்தெறிந்து
விடுகிறது. இருவரும் காதலித்தார்கள். ஆனால் லைலா, மஜ்னு போன்ற
காதலில் தோல்வி கண்டவர்கள் கதையாகவே பளிச்சியம்மன் கதை முடிகிறது.
இக்கதை மன மொத்த காதலை வரவேற்ற போதிலும், சாதிப்பிரிவுகளின்
சக்தியையும் காட்டி எச்சரிக்கிறது. ஒருவேளை காதலன் தப்பி வந்து அவளைச்
சேர்ந்தாலும், அவர்கள் பளியர்கள் கோபத்துக்கு உள்ளாகிச் சாக
நேரிட்டிருக்கும், சாதிப்பிரிவுகளின் கொடூரம் அவ்வளவு இருந்தது. இன்றும்
முற்றிலும் மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது.

இனி வேறொரு கதை :-

     இது சின்ன நாடான் கதையென்று அழைக்கப்படும். சித்தன் விளையில்
சின்ன நாடான் என்றொரு கிராமத் தலைவனிருந்தான். அவனுக்கு ஒரே மகன்.
குமாரசுவாமி என்பது பெயர். குமார சுவாமிக்கு நான்கு சிற்றப்பன்மார்.
அவர்களுக்குப் பிள்ளைகளில்லை. ஆகவே ஐந்து குடும்பங்களுக்கும் அவனே
வாரிசு அவர்களுடைய