ஒரே சகோதரியின்
மகளை அவனுக்குப் பதினெட்டு வயதாகும்போது
மணம் செய்து வைத்தார்கள். பணம் பணத்தோடே சேர வேண்டாமா?
உள்ளத்தைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை. வாலிபன் ஐந்து ஊர்களுக்கும்
தலைவனானான். குழந்தையான மனைவி, பூவணைஞ்சு, பெற்றோர் வீட்டில்
இருந்தாள். குமாரசுவாமி நாவித மங்கையொருத்தியைக் காதலித்தான். அவளும்
காதலித்தாள். இருவரும் ஆடம்பரமின்றி கூடி வாழ்ந்தனர். இதைப் பற்றி
அவனுடைய தந்தையும், சிறிய தந்தையரும் கவலைப்படவில்லை.
“நிலப்பிரபுத்துவ முறையில் பெற்றோர் திருமணம் நிச்சயிக்கத்
தொடங்கிய காலத்திலிருந்து திருமண வரைவுக்குட்படாத காதலும் (Illicit
Love) தொடங்கி விட்டது” என்று எங்கல்ஸ் கூறுகிறார். அந்த உண்மையை
அவனது பெற்றோர்களும் அறிந்திருந்தார்கள். ஆனால் மனைவி சமைந்து
வீட்டுக்கு வந்ததும் “ஒழுங்காயிருப்பான்”, என்று அவர்கள் நினைத்தார்கள்.
பூவணைஞ்சு பருவ மெய்தினாள். குமாரசுவாமியை அவளோடு வாழ
அழைத்தார்கள். அவன் மறுத்தான். இப்பொழுது போராட்டம் தொடங்கிற்று.
ஐந்து பேரும் நேரில் சொல்லியும் பயமுறுத்தியும் பார்த்தார்கள். ஐயம் குட்டி
என்ற நாவிதப் பெண்ணுக்குப் பணம் கொடுத்து விரட்டப் பார்த்தார்கள்.
அவள் மறுக்கவே பயமுறுத்தி விரட்டப் பார்த்தார்கள். குமாரசுவாமி
உள்ளத்துணிவோடு அவர்கள் சூழ்ச்சிகளனைத்தையும் எதிர்த்தான். ஐவரும்
தங்களுக்கு மேலான நட்டாத்தி ஜமீன்தாரிடம் மனுச்செய்துகொண்டார்கள்.
அவர் குமாரசுவாமிக்கு, மனைவியைச் சேர்த்துக் கொள்ளும்படி
ஓலையனுப்பினார்.
குமார சுவாமி “என் சொந்த வாழ்க்கையில் தலையிட
யாருக்கும்
உரிமையில்லை.” என்று ஓலையைத் தூதுவன் முன்னிலையிலேயே
கிழித்தெறிந்தான். ஜமீன்தார் கோபப்பட்டு, தகப்பனை அழைத்து
“உங்களிஷ்டம் போல் செய்து கொள்ளுங்கள்” என்றார்.
அவர்கள் அவனிருப்பிடம் சென்றார்கள். எத்தனை பேர்
சென்றாலும்
எதிர்த்துக் கொல்லக் கூடிய வாள் வீரன் அவன். ஆகவே தந்திரத்தால்
கொல்ல எண்ணினார்கள். ஒருவனைப் பெண் வேட மணிவித்து
வீட்டிற்கருகே அனுப்பினார்கள். ஐயம் குட்டி ஆள் அரவம் கேட்டு
வெளியே வந்தாள். வாள் வேலோடு ஆட்கள் ஒளிந்திருப்பதைக் கண்டாள்.
அவர்களிடம் சென்று போய் விடும் படி வேண்டிக் கொண்டாள். அவளோடு
யாரோ வாதாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணி குமார சுவாமி வீட்டு
வாசலுக்கு வந்தான். கையில் ஆயுதம் எதுவும் இல்லை. பெண் வேடம்
பூண்டவன் வீட்டினுள் சென்று அவனைத் திடீரென்று வெளியே தள்ளினாள்.
|
|
|
|