குமாரசாமி கீழே விழுந்தான்
தகப்பனும் சிற்றப்பன் மாரும்
அவனை இரக்கமின்றிக் கொன்றுவிட்டார்கள். அவனது தலையை அறுத்துக்
கொண்டு போய் நட்டாத்தி ஜமீன்தாரிடம் காட்டினார்கள். அவர் தன்
பொறுப்பைக் கை கழுவி விட்டார். “கோபத்தில் சொன்ன வார்த்தையை
தந்தை இப்படியா நிறை வேற்றுவது?” என்று அவர் கேட்டார்.
இச் செய்தி கேட்டு சின்ன நாடானின் மனைவி தற்கொலை
செய்து
கொண்டாள். அவனது காதலியும் உயிரைப் போக்கிக் கொண்டாள்.
இது போலவே தடி வீரையன் கதை, சிவனணைஞ்சு கதை, என்ற
பல
கதைகள் இதே போன்ற கதைப் பொருள் கொண்டவைகளாகக்
காணப்படுகின்றன. தங்கை வேற்றுச் சாதியானைக் காதலிப்பதை அறிந்து
தமையன்மார் காதலனைக் கொன்று விடுவதும், காதலி உயிர் நீப்பதுமே
இக்கதைகளின் பொருளாகும்.
இக்கதைகளில் பல உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக்
கொண்டன.
இக்கதைகளின் தலைவர்கள் யாவரினும் முத்துப்பட்டன்
பெருஞ்
சிறப்புடையவன். அவன் குலச்சிறப்புடையவன் ; கல்வி நலமுடையவன்.
ஆளும் அரசனிடம் செல்வாக்குப் பெற்றவன். ஆனால் மேல் தட்டு
வாழ்க்கையில் அவன் உள்ளம் நிறைவு பெறவில்லை. தாழ்வான குலத்தில்
பிறந்து, உழைத்துப் பிழைக்கும் இள நங்கையரிடம் அவன் அழகையும்,
இனிமையையும், மானிடப் பண்பையும் கண்டான். அவற்றையே போற்றினான்.
அவர்களோடு மண உறவு கொள்ள, வாலப் பகடையின் நிபந்தனைகள்
அனைத்தையும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டான். அதன் மூலம் சாதிப்
பெருமைக்கும், கல்விச் செறுக்குக்கும் சமாதி கட்டினான். மானிடப் பண்பின்
சிகரமாக வளர்ச்சிபெற்றான்.
இது மட்டுமா? தனது மனைவியரது உறவினரைத் தனது உறவினராக்கிக்
கொண்டான். அவர்களது துன்பங்களைத் தனது துன்பமாகக் கருதினான்.
அவர்களுடைய வாழ்க்கைக்கு வரும் இடையூறுகளைப் போக்கப்
போராடினான். இப்போராட்டத்தில் உயிர் நீத்தான்.
தனது குலத்திற்காக மட்டும் அவன் போராடவில்லை.
மேல் மலை
அடிவாரத்திலுள்ள ஜமீன்தார்களது தூண்டுதலால் வன்னியர்கள்,
மலைப்பாதைகள் வழியாக பொதி மாட்டுச் சுமை கொண்டு போகும்
வியாபாரிகளைக் கொள்ளை யடித்தார்கள்.
|
|
|
|