|
பட்டன்
: பெண்ணே உன்னைப் பெற்ற
தாய்தகப்பன் ஆரு சொல்லு பேதமை
கொள்ளாது சற்றே என்முன்னாக நில்லு,
பெண்கள்
: பின்னே வழிவிட்டு ஓடணுமானாலும் கல்லு,
வேறே பரியாசஞ் சொன்னால் பறிப்போமே பல்லு,
சாம்ப சிவ நாதர் போலிருக்கிறீர் சுவாமி
சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி.
பட்டன் : ஆண்டவன் செயலினாலுங்களைப் பெற்றாளே
மாமி,
அல்லாமல் வேறில்லை தாகந் தணிந்திட நேமி.
இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ஓடிக்
காட்டுக்குள்
மறைகிறார்கள். பட்டன் அவர்களைத் தேடி அலைந்தும் காணாமல் மயங்கி
விழுந்து விடுகிறான்.
ஓடிப்போன
பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தங்கள்
தகப்பன், வாலப்பகடையிடம் போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள்.
அவன் வெகுண்டெழுந்து மாடறுக்கும் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு
அரசடித்துறைக்கு வந்தான். அங்கே பட்டன் புழுதியில் மயங்கிக் கிடப்பதைக்
கண்டான். அவனே யறியாமல் பட்டன்மீது இரக்கமுண்டாயிற்று. கையைத்
தட்டிச் சப்த முண்டாக்கினான். பட்டன் எழவில்லை. சிறு கல்லொன்றை
எடுத்து அவன் மீது எறிந்தான். பட்டன் கண் விழித்தான். “நீ யாரென்று”
கேட்டான். வாலப்பகடை, தன் மக்களிருவரை ஒரு பார்ப்பான் மோசம்
செய்ய முயன்றதாகவும் அவனைக் கண்ட துண்டமாக வெட்டி யெறியவே
தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.
“அந்த மொழி சொன்னவுடன்
சக்கிலியன் என்றறிந்து
அப்போது முத்துப்பட்டன் முறை செப்புவான்
தாயுடன் கூடப் பிறந்த அம்மானே
சமர்த்திகளுக்காசைப்பட்டு ஓடிவந்தேனே.” |
என்று பட்டன் துணிந்து சொன்னான். மேலும்
| “நாலு பேரறிய மணஞ்
சூட்டிவைப்பாய் நாளை.” |
என்று முடிவாகக் கூறினான். அதைக் கேட்ட
வாலப்பகடை வாயடைத்துப்
போனான் ; கால் பதறிற்று ; நா உளறிற்று ; திக்கித் திணறிப் பேசினான்.
அவன் கோபமெல்லாம் ஆறிவிட்டது.
|
“நாயல்லவோ எங்கள் குலம் ஓ நயினாரே,
நாற்றமுள்ள விடக் கெடுப்போம் ஓ நயினாரே,
|
|