| |
அங்கவர்
சுமையுங்கட்டி “ஆரியங்காவுப் பாதை”
மங்கள மாகவிந்த வடமலைப்பாதை போவோம் |
| |
காட்டு
வழியே செல்லுதல் |
| |
வானரஞ்சூழ்ந்த
மலையதுதனிலே வாராரே பட்டன்மார்கள்
மந்திகள் கொம்பில் மறைந்துவிழுகிற மாமரச்சோலை விட்டார்
தேக்குடனீட்டியும் வேங்கையும் பாலை சிவந்தகுளுழுடனே
சிங்காரமாக மலையுங்கடந்து திருவாரியன்12 கோவில் வந்தார்.
வந்தந்த நாதனைக்கண்டு தொழுது மறுநாள் எழுந்திருந்து
வாய்த்த குளத்துப்புளியுஞ் சவரிமலையுங் கடந்தார்கள்.
நடந்து பொதிகைமலை வழியேவர சண்ணுமாமுட்டில் வந்து
காக்கவேணும் பொதிகாசலமென்று கட்டுடனே வாரார்
வந்ததிரு நீலகண்டனைக்கண்டு13 கடவிளைதானும் விட்டு
வரிசையாய் மேல்சொரிமுத்து பாதையும் வழிமேலே வந்து சேர்ந்தார்
தளவாயுட கொட்டகையிலே சுமைதானு மிறக்கிவைத்து
சந்தியாவந்தனம்பண்ணி சாயரட்சை சாத்தாவைத்தான் தொழுதார் |
| |
சொரிமுத்தையரை
வணங்கி வழி நடத்தல்
|
| |
அய்யா
சொரிமுத்தய்யரைத் தொழுதழகு பட்டனைக் கண்டு மகிழ்ந்து
மெய்யன் முத்துபட்டனைத்தான் தமக்காகவேணு மென்று விருப்பமாகி
செய்கடனை முடித்தவர்கள் சமையல்செய்து சிவபூஜை
கழித்தன்று தாமதித்து
வெய்யோன் வந்துதிக்குமுன்னே வீதிவழிநடந்து கள்ள ரோடை விட்டார். |
| |
சந்தியாவந்தனம்
செய்ய முத்துப்பட்டன் தமையன்மாரைப்
பிரிதல் |
|
|
கள்ளரோடை
கடந்து பள்ளவிளையும் விட்டு
காட்டுப்பொத்தை கூடியோடி கஷ்டத்துடனே நடந்தார்
நடந்து முறிஞ்சாமபுல்லு தட்டு14 விளையும் கடந்து
நல்லசுக்கு நாறிபொத்தை15 மூக்குநாறி விளை16 கடந்து
வில்லுவழி17 யுங் கடந்து பெருச்சாளிப் பொத்தைவிட்டு
பேரழகன் முத்துப்பட்டன் அரசடித் துறையில் வர
அரசடித் துறையில்வர அழகுமுத்து பட்டனவன்
அண்ணன்மாரே தாகவிடை தீர்த்துவாரேன் நீங்கள் போங்கோ
போங்களென்று சொன்னவுடன் பொருளாசைகொண்ட பட்டர் |