பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
35

  பொட்டெனவே ஓடிவாடா விக்கிரமசிங்கந் தன்னிலே
என்றுசொல்லி அண்ணன்போக ஆரியமுத்துப் பட்டன்
இறங்கி படித்துறையில் சந்தியாவந்தனம் பண்ணி
நன்றாக சிவலிங்கமும் நாராயணன் புஸ்தகமும்
நாலுவேத முறைப்படி பூசைபண்ணும் வேளையிலே
பூசைபண்ணும் வேளையிலே முத்தையன் மனப்படியே
பின்னாலே கானந்தான் தன்னாலே வந்திடுமாம்
  வாலப்பகடை என்னும் சக்கிலியனின் இரு பெண்களை
            முத்துப்பட்டன் காணல்
  பட்டனும் பூசைசெய்ய பாவையர் ரெண்டு பெண்கள்
பெட்டியிலே சோறுங்கொண்டு பூச்சிநாய்தனைப் பிடித்து
பட்டணந் தன்னைவிட்டு பசுக்கிடைக்கேகும் நேரம்
மட்டில்லா தாகமுண்டாய் வந்தனர் தண்ணீர்தனில்
குனிந்தவர் தண்ணீர்கோரி குடித்ததுமே தாகம்ர்தீத்து
பணிந்துமே கிடைக்குப்போக18 பாவையர் பாடுமோசை
இனந்தெரியாமல் கேட்டு யேங்கியே முத்துப்பட்டன்
வனந்தனில் சுத்திஒடி மறித்திட்டான் பெண்கள்தன்னை
 

முத்துப்பட்டனுக்கும் பெண்களுக்குமிடையே நடைபெறும்
                  உரையாடல்

பட்டன் :

  வனத்தில் போறபெண்ணே, எனக்கியைந்த தோர்கண்ணே
வரிசை மச்சினியே இலங்கிய மதுரசக் கனியே
கன்னல் வில்மானே மருவும் கட்டி யந்தானே
கண்கொண் டுபாராய் என்னுட காத லைத்தீராய்
பங்க யத்தேனே மன்மதன் பகழி யைத்தானே
பாசங் கொண்டேனே உன்மேல் நேசங் கொண்டேனே
சங்கீ தக்குயிலே வரும் தனிஇன்ப மயிலே
தாகங் கொண்டேனே உன்மேல் மோகங் கொண்டேனே
பங்கயக் குறிப்போ உன்மனம் பாறையி னிருப்போ
பச்சைக் கல்நிறத்தாய் தனத்தையும் கச்சினில்மறைத்தாய்
பெண்ணே உனைப்பெற்ற தாய்தகப்பனூரு சொல்லு
பேதமை கொள்ளாது சற்றே என்முன்னாக நில்லு.
  பெண்கள் :

 

 

பின்னே வழிவிட்டு ஓடணுமானாலுங் கல்லு
வேறே பரியாசஞ்19 சொன்னால் பறிப்போமே பல்லு