பக்கம் எண் :

36முத்துப்பட்டன் கதை

  பட்டன் :
  இந்தஉறுதியுஞ் சந்தோஷஞ் சொன்னாலுங் கேளேன்
இஷ்டமாக கூடுடுயிருக்க இது நல்லநாளே
  பெண்கள் :
 

வந்தசகுனமோ அக்காள்இ வனா ருகேளு
மடியைப்பிடிக்க வருகிறான் பாவி சண்டாளன்,
சாம்ப சிவநாதர் போலிருக்கிறீர் சுவாமி
சக்கிலிச்சி நாங்கள் தீண்டப்பொறுக்குமோ - பூமி

  பட்டன் :
  ஆண்டவன் செயலினாலுந்தனை பெற்றாளே - மாமி
அல்லாமல் வேறில்லை தாகந்தணிந்திட - நேமி
சொந்தமாகவே வந்தேன் மையியலைத்தீரு.

 

பெண்கள் :
  சுவாமி பொதிகாசல முண்டு கார்ப்பார்
விந்தையாய் பேசுறானே எங்களைக் காரு
வெட்டிடு வானென்தகப்பன் இதோ உன்னைபாரு.
பட்டன் :
  நாக்கை சுயழற்றுது உள்வாய்யுளறுது பெண்ணே
நன்மையுண்டு கையால் தண்ணீரு தந்திடு கண்ணே
  பெண்கள் :
  கன்றுக்கிரங்கும் பசுபோ லலைகிறீர் சுவாமி,
இது காரியமல்ல வந்தவழி போம் சொன்னேன்.
அப்பன் பசியோடே தேடியிருப்பானே யெங்களை,
அப்புறம் தூரவிலகிடும் போறோம் நாங்களே.
  பட்டன் :
  ஒப்புடன் கூடியிருக்கலாஞ் சக்கிலிப் பெண்களே
ஓடிப்போனா லெந்தன்தோஷம் விடாதடி உங்களை
  பெண்கள் :
  பொழுது உயர்ந்து வெகுநேரமாகுது பொம்மக்கா
போகவொட்டாமலே நம்மை மறிக்கிறான் திம்மக்கா
மறித்துமே பெண்களை முந்தியே எட்டிப் பிடிக்கிறான்
மையல் பொறுக்காமல் மன்மதபாணந் துடிக்கிறான்