| |
பெண்களிருவரும்
ஓடிப்போதலும் தொடர்ந்து பின் சென்ற பட்டன்
கீழே விழுதலும் |
| |
இன்னாபிடியென்று20
அக்காளுந் தங்கையுஞ் சேர்ந்து
இருண்ட செடிக்குள்ளே நுழைந்துமே போகிறார்கள் ஓடி.
மின்னலைப் போலொத்த பெண்களைக் காணாமல் கூடி
பின்னாலே வருகிறாரே துள்ளிச்சாடி.
பெண்களுக்கு புண்ணியம் உங்கள்கூட நானும் வாரேன்
பேசாம லோடுகிறீர்கள் மறுமொழி கூறேன்.
உள்பதர்த்தங்கொண்டு ஓடுகிறார் சூறாவளிபோல்
உத்தமனஞ் சாணத்தி யொத்தைவழி21 யாகத்தானே
ஓட்டமுந் தாகமும் வெயிலும்பொடி சூடுங்கொண்டு
உத்தம முத்துப்பட்டன் கீழ்விழுந்தான் மையல்கொண்டு. |
| |
பெண்களிருவரும்
தகப்பனிடம் நடந்தவற்றைக் கூறல் |
| |
ஓட்டமாய் தகப்பனுடைய
கிடையைப்போய்க் கண்டு
வாலப் பகடையுடன் சொல்லுவாள் செய்திவிண்டு
|
|
பெண்கள்
:
|
| |
அரசடி
துறையிலிருந்து ஒரு பார்ப்பான் வந்து
அக்காளையு மென்னையும் கோரணி22 செய்தான் துணிந்து
மடமடென்று காட்டுப்பாதையா யோடிவந்து
வந்தோம் இளைத்தோம் மாபாவி உனக்குப் பிறந்து
யார்செய்த நன்மையே நாங்கள்பிழைத் தோடிவந்தோம்.
அய்யா சொரிமுத்தய்யர்க்கு வழிபாடு நேர்ந்தோம்.
தாயாரறிந்தால் உயிர்வைக்க மாட்டாளே அம்மாள்.
சாமர்த்திய மெல்லாமங்கே தூரக்கெட்டி வைப்பாள் |
|
|
வாலப்பகடை
பட்டனைக் காணல் |
| |
அந்தமொழி
கேட்டவுடன் பகடைதானும்
அஞ்சுமணி வல்லயமும்23 தடியுங்கொண்டு
வந்தவழிதனைத் தேடி நாய்பிடித்து
மாடறுக்கும் கத்தி கையிலெடுத்துக்கொண்டு
சிந்தை பொறிபோல் கலங்கி செருப்பு மாட்டி
செடியில் நுழைந்து குறுக்குவழி வாரநேரம்24
அந்தணன்தான் கிடக்கிறதை பகடைகண்டு
தன்முகத்தி லறைந்தழுது புலம்புவானே |
| |
வாலப்பகடையின்
புலம்பல் |
|
அய்யய்யோ
பாவித்தெய்வமே இந்தநல் லழகுடைய
ஆண்பிள்ளைபோல் கண்டறியே னான் |