| |
நாவுளறிக்
கால்பதறி அவன் ஏதோ சொல்லுவான்.
பாவியைப் பார்த்திந்தமொழி சொல்ல நியாயமோ
பார்த்தபேர்க்கு ஏற்றிடுமோ நேர்த்திதானிது. |
| |
பட்டனின்
வேண்டுகோளுக்குப் பகடையின் பதில் |
| |
நாயல்லவோ
எங்கள்குலம் ஓ நயினாரே !
நாற்றமுள்ள விடக்25கெடுப்போம் ஓ நயினாரே !
செத்த மாடறுக்க வேணும் ஓ நயினாரே !
சேரிக்கெல்லாம் பங்கிடவேணும் ஓ நயினாரே !
ஆட்டுத்தோலும் மாட்டுத்தோலும் அழுகவைப்போமே,
அதையெடுத்து உமக்குநன்றாய் அடியறு26 ப்போமே,
அடியறுப்போம் சுவடுதைப்போம் வாரறுப்போமே
அதையெடுத்துக் கடைக்குக்கடை கொண்டு விற்போமே,
சாராயம் கள்குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியன்தான் நயினாரே, |
| |
பட்டனின்
மறுமொழி
|
| |
கோபம்
வேண்டாம் மாமனாரே சொல்லக்கோளும் நீர்
கோடிகோடி தர்மமுண்டு உமது மக்களை
சாதிமுறையாகத் தாலிகெட்டி வைத்தாக்கால்
சகலதொழிலு முங்கள்கூட செய்வேனான்.
தாய் தகப்பன் நீயல்லவோ யின்றுமுதலுக்கு
சாதிசனம்போல் நின்றுவாரேன் குடிலுக்கு. |
| |
தன்பெண்ணை
மணம் செய்து கொடுக்க பகடை விதித்த
நிபந்தனைகள் |
|
|
வருகிறேன்
என்றீர் சுவாமி என்னபிரமை
வருமிடத்தில் சொல்லுவது வகைக்குவருமோ?27
அப்படிச் சிவன் கற்பனை28 உண்டுமானால்
நாற்பது நாளைக்குள் முப்புரிநூலும் குடுமியும்
மெய்யுடன் அறுத்தெறிந்து எங்களைப்போல்
ஒப்புடன்நீர் செருப்புக்கட்டி வந்தாக்கால்
எப்படியாகிலும் மக்களைக் கைபிடித்துத் தாரேன் |
| |
இருவரும்
பிரிந்த செல்லல் |
| |
தாரேனென்று
சொன்னமொழி சத்தியமென்று
சாக்ஷிவை, சூரியன்மேல், சஞ்சலமில்லாமல்
எந்தனை ஊருக்கு தானனுப்பு மாமா
போய்வாரு மூருக்கு பொழுது மடையுமுன்னே
போறேனென்று வாலப்பகடை போய் கிடைசேர்ந்தானே. |