பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
41

  இன பாதிக்காரர் வள்ளுவனும் வந்து ஏத்த32 முகூர்த்தமிட்டு
இட்டாரே அத்திமரம் நாட்டி ஆவரம்பூக்கொண்டு பந்தலிட்டு
மணவரையிட்டு பகடைகள்கூடி வாய்த்த நல்ல பெண்களுக்கு
வளையுடன் பாசியும் காதில் பொன்னோலையும் மஞ்சள் பருக்கைபூசி
நெற்றியில் பொட்டு மையிட்டு மூக்குத்திநத்தும் பொருந்தவிட்டு
வேடிக்கையாக இரு பெண்கள் தன்னையும் நேசமாய்க் கூட்டி வந்து
வந்தபட்டனும் பெண்களையும் அந்த மணவறை தன்னில் வைத்து
மங்கிலியம் நிறைநாழியும் வைத்துக் கணபதி கொண்டுவைத்து
சந்திரன் சூரியன் தேவர்கள் மூவர்கள் சாட்சியாக முத்துப்பட்டன்
தாலியைப் பூட்டினான் பொம்மக்கா திம்மக்கா தன்னுடைய கழுத்தில்
கழுத்தில் மாலையிட பகடைகள்கூட கலந்து குலவையிட
காப்புக்கையோடந்த மாப்பிள்ளைக்கு பெண் சாப்பாடு கொண்டு வைக்க
உறவு முறையாகும் சடங்கு கழித்தவுடனே விருந்தளிக்க
உற்றநல்ல பகடையெல்லாம் மொத்தமாய்த் தாரை வார்த்தார்
தாரை வார்த்தவுடன் சக்கிலியப்பெண்கள் சகலபேரும் கூடி
சாதி முறைப்படி கும்மியடிக்கிற சத்தத்தைக் கேளுங்கள்.
  திருமணத்தில் கும்மி அடித்தல்
  ஆரிய நாட்டு பிராமணனாம் அவர் ஆறண்ணமார்க்கு இளையதம்பி,
காரணவான் முத்துப்பட்டனுக்கு கலியாணகும்மி யடிப்போமடி.
இந்திரன் போல் முகத்தழகும் சூரியன் போல் முகத்தழகும்
சந்திரன் போல் முத்துப்பட்டனுக்கு இசையகும்மி யடிப்போமடி,
தெய்வகுலத்துப் பிறந்தவனோ. தெக்ஷிண தேசத்து மந்திரியோ
அன்னமே இவர்க்கும் பெண்களுக்குமாக ஆனந்தக்கும்மி யடிப்  போமடி.
மோகனரம்பையோ மேனகையோ பெண்கள் பார்வையின் கொண்டையில் சாயலைப்போல்
வகுப்பு கொண்டையும் காதிலேயோலையும் வர்ணித்துக் கும்மி யடிப்போமடி.
முறுக்குமீசையும் பொட்டழகும் முத்துக் கோர்த்தாப் போற் பல்லழகும்
அரக்குருமாலும் பட்டனைவர்ணித்து ஆனந்தக்கும்பி யடிப்போமடி.
மன்மதனும் ரதி தன்மையும் போலவே வகுத்தானே பாவி பிரமனுந்தான்.
கண்ணுக் கேற்றவர் பட்டனேயல்லாது காண்கிலோம் பூமிதனி லொருவர்
வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் நமக்கெத்தனை கேட்டாலும் தான் கொடுப்பார்.