| |
அத்தனருள்
பெற்று நித்தியம் வாழ்வாரென்று ஆனந்தக் கும்மி யடிப்போமடி |
| |
.திருமணச்
சடங்குகள் முடிந்து பட்டன் ஓய்வு கொள்ளல் |
| |
வஞ்சிப்பகடை34
கெஞ்சிக்கும்மியடித்து வட்டமணவறைகிட்ட
வந்து வாலப் பகடையும் சேருப்பகடையும் வள்ளிப் பகடையும் ஊமச்சியும்
கோவில் பகடையும் சிவனிப்பகடையும் பொம்மி பகடையும் சோனியரும்
ராச்சி பகடையும் சின்ன பகடையும் நாச்சிபகடையும் பாபாக்களும்
நாலைந்து பகடையும் ஒன்றாகக்கூடி நத்தையும் சட்டியிலே சோறு வைத்து
நல்விருந்து களித்துச் சாராயம் கள்ளுக்குடித்த வெறியுடனே
கள்ளும் சாராயமும் இறைச்சியும் எச்சியும் கொள்ளாமலே முத்துப் பட்டனுக்கு
கண்ணிலே காயநீர் வந்திறங்கியே கஷ்டப்படுகிற வேளையிலே,
கலியாணச் சடங்கு முடியுமுன்னே யிந்தகாலப் பிழைவந்தது பட்டனுக்கு
பொம்மக்கா மடியில் காலைவைத்தான் திம்மக்கா மடியில் தலையை வைத்தான்,
பெண்களிடந்தன்னில் நித்திரை போகவே அங்கொருசொர்ப்பனம்
கண்பானாம், |
| |
பட்டன்
கண்ட கனவு |
| |
நித்திரை
தனிலே பொல்லாத சொர்ப்பனம் துர்க்குறியாகவே கண்டாணாம்
கருமயிலைகாளை கிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறக்கக் கண்டானாம்.
நேரிட்டுவந்து ஒருகடுவாயது35 கூறிட்டுக்கீறவும் கண்டானாம்
கையிலே கட்டிய காப்ப நூல்தன்னை கறையானரித்திடக் கண்டானாம்
கோழிக் கூட்டுக்குள் விருகுவந்து36 நல்லகுஞ்சு பெட்டையும்
கொள்ளக் கண்டான்.
கொண்டையறுத்து மலையிலே தூக்கிக் கிடக்கக்கண்டான்
பட்டன் கனவு தன்னை |
| |
பட்டனின்
மாடுகள் களவு போனதாக செய்தி வருதல் |
|
|
பதறி
முழித்து பலதிக்கும் பார்த்து பரிதாபங் கொண்டங் கிருக்கை யிலே
பட்டனுடைய பசுக்கிடையை கள்ளர் பத்திக்கொண்டுபோனார் என்று
சொல்லி வன்னியர்
“அண்ணே முத்துப்பட்டா உனக்கிடைமாட்டைஅடித்துக்
கொண்டு போறார்” |