பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
43

  ஆரென்று கேட்டேன் அடிக்கவந்தான் நானுங்கூட மாறியடித் தோடி வந்தேன்
ஊத்துமலையில் வன்னியரும் உப்பரங்கோட்டை37 யானுங்கூடி
உன்கிடை மாட்டை திசை சாய்த்துப் போகிறார் ஓடிப்போ முத்துப்பட்டா”
  களவுபோன மாடுகளை மீட்க பட்டன் புறப்படுதல்

                  தரு
  “சட்டெனவே எழுந்தவன் வல்லய மெங்கே தடிகையிலே” யென்றான்
சந்திரகாவி உருமால் தலையிலே சுங்கல் வைத்துக்கட்டி
சல்லடம் கட்டி கச்சையிறுக்கி சமுதாடு தான் சொருகி
தட்டியவன் காடுதாங்கி செருப்பதை மாட்டினான் காலதிலே
பூச்சிநாய் தன்னையும் பாகத்தில் சேர்த்து புறப்படும் வேளையிலே
 

பட்டன் மனைவியர் தடுத்தல்

  “பெண்களே நீங்கள் இருங்கோ நானும் போய்வாரேன்” கள்ளர்கள்
“போனாலும் போகட்டும் என்னப்பனிடம் சொல்லி பொழுது விடிந்தவுடன்
போயந்தக் கள்ளரை வெட்டி யதுக்கிப்போன பசுக்களை
நாளையுதயத்தில் கொண்டுவரச் சொல்வோம் நாயகரே போக வேண்டாம்
நலமாய் கணவரே கோபமில்லாமலே நன்றாய் படுத்துறங்கும்
மாலை மணத்தோடே யிந்த ராத்திரியில் மாற்றான்மேல் சண்டை செய்ய
வகையுடன் போவார் ஒருவரை காணிலோம் வையகம் தன்னிலே” தான்.
என்று இருபெண்கள் கணவன் யிடுப்பை எட்டிப் பிடித்துக் கொண்டு
“என்னாணை உன்னாணை கண்ணாணை ஈஸ்வரன் தன்னாணை போக வேண்டாம்
கணவர் நீர் போனாக்கால் உம்முடனே கன்னியரும் வாரோம்”
  பட்டன் அவர்களைத் தேற்றிப் புறப்படுதல்

 

“வாரேனென்று சொன்ன பெண்களே ஒன்றுக்கும் மலையாமல்” இருங்கோ
மாற்றானிடம் போய் வெட்டியடக்கியே வந்துவிடுவேனொடியில்
கள்வர்களைக் கண்டு பட்டன் போர் புரிதல்
சண்டைக்குப் போகிறான் இந்திரசித்தைபோல் சுவாமி முத்துப் பட்டனும்
சந்திரகாவி உருமால் தலைக்கட்டும் சுங்கல் சருகைமுந்தி
காலில்கொலுசுடன் வீரமணித்தண்டை கையிலே பாசிபந்து