| |
கழுத்திலே
மோகனமாலையும் நல்லகருத்த உடுப்புமிட்டு
காட்டுபாதைவர சீங்குழலூதியே கண்டான் பசுமாட்டை
மாட்டைக்கண்டோடி மறித்து பட்டனவன் மட்டிமல்லா போருசெய்து
வளையவளையத் தடிகொண்டு வீசியே வன்னியரை யொதுக்கி
திரையோடே மாட்டை தளுக்குதிட்டையில் சேர்த்துமே முத்துப்பட்டன்
சிங்கம்போல்வந்து வன்னியர்கூட்டத்தில் திக்கென பேர்புரிந்தான் |
| |
போர்க்
காட்சி
தரு |
| |
வாள்கொண்டு
வெட்டிமடிந்தார் சிலபேர்
வல்லயத்தில் குத்தி மாண்டார் சிலபேர்
ஊளையிட்டுக் கொண்டுருண்டார் சிலபேர்
ஒதுங்கி அடிபட்டிறந்தார் சிலபேர்
மட்டுமடிந்து கிடப்பார் சிலபேர்
பட்டபின் வெட்டாதே என்றார் சிலபேர்
கட்டாரிகொண்டு சிலபேர் தன்னை
பொட்டியும் பேறும் அத்தது சிலபேர்
கையற்று மெய்யற்று போனார் சிலபேர்.
|
| |
ஒளிந்திருந்த
ஒருவன் பட்டனைக் குத்துதல்
வேறு
|
| |
இப்படிவெட்டி
மடிவதைக் கண்டு
இருண்ட செடிக்குள் ஒளிந்து இருந்தான்
தப்பிப்பிழைத்தங் கொருத்தனிருக்க
சுவாமி முத்துப்பட்டன் சந்தோஷமாக
அப்படியே பூச்சிநாயும் பிடித்து
ஆற்றல் வந்தவன் கையை அலம்ப
சப்பாணி நொண்டி ஒளித்தவன் றானும்
சுவாமி முத்துப்பட்டனைக் குத்தினானே |
| |
தன்னைக்
குத்தியவனைக் கொன்றுவிட்டு பட்டன் உயிர்விடுதல் |
| |
குதித்தோட
மாறி அவனையும் குத்த
கோரையாறு தனிலே பட்டுவிழுந்தானே
கோடை மலையதுபோல் முத்துப்பட்டன்
ஓடைக் கரையதிலே பட்டு இறந்தான் |