| |
பட்டனின்
நாய் வீட்டுக்கு ஓடுதல்
விருத்தம் |
| |
பட்டிநாய்
ஊளையிட்டு சுவாமிமேல் புரண்டழுது
கட்டின கயத்தோடே காடெல்லாம் திரிந்துஓடி
மட்டில்லாத துயரங்கொண்டு வாய்திறந் தூளையிட்டு
முட்டியே குலைத்துக்கொண்டு முந்திநாய் வருகுகென்றே |
| |
பட்டனின்
மனைவியர் கனவு கண்டு புலம்புதல் |
| |
நாய்வருவதற்கு
முன் சேர்க்கையாய் ரெண்டுபெண்கள்
பாயதி லுறங்கும்போது பாதகமாய்க் கவுகனண்டு
தாய்தந்தை இறந்ததென்று தவிப்பதுபோல்
கூவியே அழுதுபெண்கள் கூப்பிட்டுத்தான் சொல்வாளே
“அக்கா நீ கேள் நானும் அசந்து39 உறங்கையிலே
கச்சமாகவல்லோ கண்டகினா கணவனுக் காகாது
பக்கத்திலே ஒளிந்தொருவன் பதுங்கி யிருந்திடவும்
அப்புறம் ஓடிவந்தே கணவனைக் குத்திடக்கண்டேனான்
சக்கரம்போல் சுழன்று மன்னவன் தண்ணீர்க்கரை யதிலே
குப்புறவே விழுந்தயிடத்தில் குடலும் சரியக்கண்டேன்
மலையில் புலிகளும் நம்மன்னவனுக்கு துணையாகி
கழுகும் ஒருநரியும் மன்னவனைக் காத்திடக்கண்டேன் யான்
கள்ளியும் கல்லடியும் சிலகாட்டில் மிருகங்களும்
கொள்ளிவாய்ப் பேய்கள் வந்து பந்தம் கொளுத்திடக் கண்டேனான்
தாலிமடை40 முறிந்து தெருவினில் தானே விழுந்திடவும்
வருக்கைபலா மரமுறிந்து மலையில் விழவுங்கண்டேன்
குடிசையில் தீப்படவும் கொட்டாரம் வைக்கக் கண்டேன்”.
|
| |
பட்டனைத்தேடி
மனைவியர் இருவரும் புறப்படுதல்
விருத்தம் |
| |
இவ்விதஞ்
சொப்பனங்கள் இயல்பறக் கண்டபெண்கள்
“தையலே எனக்குப்புத்தி சஞ்சல மாகுதிப்போ
ஐயையோ சிவனேயிப்போ ஆண்துணைக் கொருபேரில்லை
பையவே போவோமெ”ன்றார் பைங்கொடி ரெண்டுபேரும்
சாயலை அறியவென்று சமர்த்துள்ள பூச்சிநாயும்
நாய்வந்து காலைக்கட்டி நடுங்கியே மூச்செறிந்த
வயலைக்கண்டு பெண்கள் சதியேது கோரையேது
போயுமே பார்க்கவேணும் புறப்படு எனது தங்கை |
|
|
மனைவியரிருவம்
காட்டுவழியில் புலம்பிச் செல்லுதல்
தரு |
| |
முன்னாலே
ஓடுது பூச்சிநாய்தானும் முணங்கியே வால் சுருட்டி
பின்னாலே வாராரே பெண்கள்ரெண்டுபேரும் மரிந்து வழி பார்த்து
மன்னனுடைய தடந்தான்இந்த வழியிலே காணோமே
என்னமாய்ப்போய் மனந்தரித்து இருப்போமிந்நேரம்
பட்டப்பகல் போலிருந்தாலுமிந்த பாதை தெரிந்திரிந்திடுமே
பட்சி பறவைகளே41 கணவனை பார்த்திட்ட பேரில்லையா
பொத்தைகளே42 செத்தைகளே43 மலைப்புல்லுகளே நீங்கள்
மெத்தமயங்கிற பேருக்கு ஒத்தாசை செய்யொண்ணாத
மண்ணே மலையே மரமே மேடே வனத்தில் மிருகங்களே
கண்ணானமன்னவன் இப்போனதை கண்ணாலே கண்டீர்களோ
காடை கருவாளி காட்டிலுள்ள செண்பகமே
மாடப்புறாப்போல் எந்தன் மன்னனைக் கண்டீர்களோ?
ஆலமரமே அழகுள்ள பிலாமரமே
மாலையிட்டுவந்த எந்தன் மன்னனைக் கண்டீர்களோ?
அத்திமரம் வேங்கை அழகுள்ள தேக்குமரம்
புத்தியுள்ள கணவன் யிவ்வழிபோனதை காணீர்களோ?
இந்தவனத்திலே யிருந்து இரவினில் சஞ்சரிக்கும்
பன்றிகளே நீங்கள் எந்தன் மன்னனைக் காணீர்களோ?
கூவுங் குயிலன்னமோ கொத்திய புல்லுகளே
சேவலும் பேடைகளே மன்னவன் செல்வதைக் காணீர்களோ
சிம்மமே கடுவாயே புலியே சிறிய கரடிகளே
அங்கம் பறக்குது என் கணவன்போன அடவியைக் காணீர்களோ?
கூகையே ஆந்தைகளே குதிச்சு மேய்கின்ற புல்வாயே
புனுகுப்பூனை வெருகே முன்னே சாடிபோற மானினமே43
அழுகைக் குரல்கேட்டால் மன்னனை அழைத்துமே வாரீர்களோ
பூச்சியாய் ஓடி முன்னாலே நீ மூச்சு முயற்றுகிறாய்
வாச்சுதே அன்றைக்கு போச்சுதே யிப்படி ஆச்சுதென்னமாயம்
மன்னவன் எங்கேயிருக்கார் நாயே நீயும் ஆவியே ஓடுகிறாய் |
| |
இறந்துகிடக்கும்
பட்டனைக் கண்டு அழுது புலம்புதல் |
| |
கண்ணான
மன்னவன் செத்துக்கிடப்பதை கண்டாரே பெண்கள் வந்து
அடித்து விழுந்தாளே இமையாத புழுதியிலே
சட்டியும் சோத்தையுந்தான் சங்கடமா விட்டெறிந்தாள்
இடித்தாள் வயிற்றினிலே யீரல் கலங்கிடவே |