| |
வாரியெடுத்தாளே
மாரோடே அணைத்தாளே
பொட்டும் அழியலையே போட்டகுறி மங்கலையே
சற்றே கருங்கலையே சாமிமுகம் வாடலையே
செருப்பிட்ட காலத்திலே சிந்திரெத்த மாவானேன்
முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக்கொண்டழுதாள்
நாலு கழியலியே நாலாநீர் கூடலையே
ஏழு கழியலியே ஏழாநீர் கூடலையே.
தாலிகொண்டுவந்த தந்த தட்டானும் போகலையே.
மாலை கொண்டுவந்த பண்டாரமும் போகலையே
கொட்டி பறையனுக்கு கொத்துக் கொடுக்கலையே
கோண மணவறையில் குந்தவைத்த தோஷமுண்டு.
வட்ட மணவறையில் வந்திருந்த தோஷமுண்டு.
பொருந்தி யிருந்தோமோ பிள்ளைகளை பெற்றோமோ.
பணியாரம் சுட்ட சட்டி பாதிமணம் போகலையே
பந்தல் பிரிக்கலையே வந்த ஜனம் போகலையே.
என் கணவா என்கணவா யிந்தவிதி வருவானேன்?
சண்டாள வன்னியர்கள் சதித்தாரே கணவனைத்தான்
பசலை தலையிலேதான் பாரயிடி விழுவானேன்?
குழந்தை தலையில்தான் குடிகேடு வருவானேன்?
பார்த்தாளோ பார்த்தாளோ பாம்புக்கண்ணி பார்த்தாளோ
குண்டு கண்ணி சக்களத்தி குறிப்பாக பார்த்தாளோ?
ஆணழக னென்று எந்த அடியறுவாள் பார்த்தாளோ?
உண்டனோ உன்சோறு உடுத்தேனோ உன் புடவை
தின்றேனோ உன்பாக்கு சேர அணைந்தேனோ
மஞ்சள் புடவையதை மடித்து உடுத்தும் நாளையிலே
கஞ்சிப் புடைவையைக் கழுத்திலிட நாளாச்சே |
| |
பட்டனுடன்
உடன்கட்டை ஏற விரும்பி மனைவியரிருவரும் சிங்கம்
பட்டி ஜமீன்தாரிடம் உத்தரவு கேட்டல் |
| |
என்று
சொல்லிப் பெண்கள் ஏற்றதொரு கணவனைத்தான்
தூக்கி மலையோரம் சூதானம் தான்படுத்தி
உன் கட்டை யேறுவதற்கு உத்தரவு வேண்டவென்று
சிங்கம் பட்டி அரண்மனையில் தீகேட்க வேணுமென்று
ஏழுமலை கடந்து வாராளே பெண்கொடியாள்
மணி முத்து ஆறுவிட்டு வனத்தோடே தானும் வந்து
சிங்கம்பட்டி அரண்மனையும் சீக்கிரமே ஓடிவந்து
சிங்கரவன் ராஜாவே தீப்பாயப் போறோமே
உத்தரவு தான்வேணும் உடன்கட்டை ஏறுவதற்கு
தடங்கல் செய்யவேண்டாம் சுவாமி அனுப்பிவிடும் |