சாந்து புனுகு பன்னீர்
பூசி அந்த நல்லகட்டையில் பெண்களும் வந்து
அக்காளும் தங்கையும் பட்டனையதிலே கிடந்தி
தந்து கருமாதி தன்னையும் முடித்து மாலை கழற்றி நிலத்தி லெறிந்து
சந்திரன் சூரியன் சாக்ஷிகள் வைத்து தானுமே கட்டையிலேறினார் பெண்கள்.
இந்தர தேவர்கள் மூவர்கள் சூழ எம்பெருமானும் பொன்னம் பலம் விட்டு
தரமாகவே தேவியுடனே ஆகாச மார்க்கத்தில் வந்தவர் பார்க்க
சுந்தர பெண்களிரு பேருங்கூடி தோத்திரஞ் சொல்லி வாழ்த்திடு வாரே.
வாழி ! வாழி ! ! என்றும் ஈஸ்வரனார் வாழியவே !!!! |
(முற்றிற்று)
|
|
|
|