ஆனையே எங்கொளிந்தாய்? அச்சம் வந்து சேர்ந்த தண்ணா! பூலாஞ் சருகரித்து - சின்னண்ணா - புதுக்குடத்துத் தண்ணி கொண்டு மேனாட்டு வேட்டுவர்க்கு வேலை செய்யப் பெண்ணானேன்.... கவிதை அழகும் சோகமும் இழைந்த வரிகள் இவை! ஒரு மயிர் உதிர்ந்தாலும் கவரிமான் உயிர் வாழ்வதில்லை. அந்த மரபில் வந்த கொங்குநாட்டுப் பெண் குப்பாயி என்ன செய்தாள்? அன்பு மொழிகளில் மனம் தேறி திருக்காம் புலியூர் வரும்போது என்ன நடக்கிறது? குப்பாயி முடிவு எப்படிப்பட்டது? |
| | புண்ணாய் மனம்நொந்து பொற்கொடியாள் குப்பாயி எண்ணாது எண்ணியேதான் குப்பாயி ஏங்கி மனங்கலங்கி நாவைப் பிடித்திழுத்து நல்லுயிரை மாய்த்துக் கொண்டாள்! |
| | மானம் பெரிதென்று உயிரைவிடும் பண்பு வாய்ந்த மக்கள் கதையல்லவா இது? சத்தியத்தைக் கூறி பொன்னர் தட்டான் பின்போவதும் வேடுபடை சங்காரம் செய்யச் சென்ற சங்கர் மடிந்த களமாவதும் அத்தை பிள்ளை மைத்துனர்கள், சாம்பான் எல்லோரும் மடிவதும் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள். இதில் நெஞ்சை உலுக்கும் இன்னொரு நிகழ்ச்சிதான் அண்ணிமார்கள் முடிவு. அழுது அழுது புலம்பி அண்ணன்மாரைத் தேடிச் செல்ல துணைக்கு அண்ணிகளை அழைக்கிறாள் தங்கை. அவர்களோ சிறை வைக்கப்பட்டவர்கள். திருமணம் என்ற சடங்கு ஒன்றைத் தவிர, எந்தவித சுகத்தையும் அறியாதவர்கள். அவர்கள் வர மறுத்து சாத்திக் கதவடைத்துத் தாழ்ப்பாள் போடுகிறார்கள். |