பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை11

உள்ளம் குமுறி வெடித்துத் தங்கள் இதயச் சுமையைச் சொல்கிறார்கள் தங்கையிடம்
உங்களண்ணர்-

  மாடத்தைக் கட்டிவைத்து மயிலைச் சிறையில் வைத்தார்!
  கூடத்துப் பொன்கூட்டில் குயிலைச் சிறையில் வைத்தார்!
  இருந்த மனையை விட்டு - தாயே - உன்பிறகே வாரதில்லை!
  வாழ்ந்த மனையைவிட்டு வாரதில்லை உன்பிறகே!

  என்ற வேதனையின் வெடிப்புக்களைக் கேட்டு நெஞ்சு கலங்கி விடுகின்றாள் தங்கம்.

  அண்ணிமார்கள் வாழ்வை அவலமாக்கிக் கொண்டவர்களா? எனக்குத்
தெரியவில்லையே? எனத் துடிக்கிறாள். அந்தப் பத்தரை மாற்றுத் தங்கம் பதை
பதைத்துக் கண்ணீர் சிந்தி எவ்வளவு வாஞ்சையுடன் பேசுகின்றாள் பாருங்கள்:

  “வையகத்தார் போலே நீங்கள் வாழ்ந்திருப்பீரென்றிருந்தேன்
  தேசத்தார் போலே நீங்கள் சேர்ந்திருப்பீரென்றிருந்தேன்
  ஊருலகத்தார் போலே - அடி - உறவுள்ளீ ரென்றிருந்தேன்
  பாருலகத்தார் போலே அண்ணியரே பழகிடுவீரென்றிருந்தேன்”

  என்று தன் மனம் விட்டு அழுது நடந்ததை மறந்து மன்னித்து தன்னுடன் வருமாறு
மறுபடியும் கூப்பிடுகின்றாள். அவர்கள் ஒரேயடியாக வர மறுக்கவும், தங்கையழுத
கண்ணீர் நெருப்புப் பந்தாகிறது.

   “கண்ணீர் அழுத கண்ணீர் காரிகையாள் வழித்தெறிந்தாள்!
  அழுத கண்ணீர் மாலையிட்டோர் அக்கினியின் பந்தாகி