பக்கம் எண் :

12அண்ணன்மார் சுவாமி கதை

விழுந்த கண்ணீர் பூப்பத்தாய் மின்னல் கொடிபோல் விழுந்து
பட்டகசாலை அண்ணர் பரந்த அரண்மனையும்
சுத்தாலை வாசலெல்லாம் சுத்தித் தீ மூளுதப்போ”

  தங்கையின் கண்ணீர் நெருப்பாகி, அக்கினியின் பந்தாகி விழுவது சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை தீமூளச் செய்ததை நினைவூட்டுகிறதல்லவா?

  அதன்பின் காட்டுவழி நடந்து படுகளத்தில் அண்ணன்மாரைத் தங்கை காண்பதுவும்
எல்லோரும் தெய்வமாவதும் அடுத்து வரும் நிகழ்ச்சிகள்.

  கொங்கு நாட்டில் அண்ணன்மார் தெய்வமாகி நிலை பெற்றவை நூற்றுக்கும்
மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

  கொங்கு வேளிர் தங்கள் குலத்தெய்வமாக வழிபடும் அண்ணன்மார் வேளாண்குடி
மக்கட்கு அருள்செய்த வரலாறுகள் கதை கதையாக இன்றும் சொல்லப்படுகின்றன. சேலம்
மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் குமாரமங்கலத்தில் (அமைச்சர் மோகன் குமார மங்கலத்தின் முன்னோர்கள்) அண்ணன் தம்பியாக இருந்த குடும்பத்தில் பாகப்பிரிவினையாலோ பஞ்சத்தின் கொடுமையாலோ அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலர்
மாடுகளை ஓட்டிக்கொண்டு வெங்கம்பூர் வந்து செங்கற்படுகைக் காட்டில் குடியேறியிருந்து
வாழ்ந்ததாகவும், அவர்கள் பரம்பரைதான் வெங்கம்பூர்த்தூரன் கூட்டத்தார் என்பதும்
பெரியவர்கள் பெருமையாகச் சொல்வதுண்டு.

  மேற் குறிப்பிட்ட திருச்செங்கோடு குமார மங்கலத்தில் இருந்து முன்னோர்கள்
கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வெங்கம்பூர் வரும்போது மோழியப் பள்ளி வழியாக
(திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருகில்) வந்ததாகவும்,