அப்பொழுது அங்கு கோவில் கொண்டிருந்த அண்ணன்மார் சுவாமியை வணங்கி வழிபட்டதாகவும், “கறந்த பாலும் பிறந்த பிள்ளையும் உன்பேர் வைத்துக் கொண்டாடுவோம்” என்று கும்பிட்டு வந்ததாகவும் சொல்லுவார்கள். அவ்வாறு வரும்போது அவர்கள் காவேரி நதியைத் தாண்டி நீரில் இறங்கி வெங்கம்பூரை அடையும்போது வெள்ளம் வரவும், அப்போது காவல் தெய்வமாக அக்கரைப்பட்டி முத்துக் கருப்பண சுவாமி வழி காட்டியதாகவும், அவர்கள் எடுத்து வந்த கல் ஒன்றை வெங்கம்பூர் பொன்காளி அம்மன் கோவிலில் நாட்டியதாகவும் கூறுவர். அக்கரைக்கு அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்த தெய்வமாதலால் ‘அக்கரைப் பட்டியான்’ என அந்த விக்கிரகத்துக்குப் பெயரிடப்பட்டு அன்று முதல் வெங்கம்பூரில் பிரபலமாகியுள்ளது. பொன்காளியம்மன் கோவிலும் அக்கரைப்பட்டியான் கோவிலும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதைப் பற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை அமரர், கே.பெரியண கவுண்டர் இத்தொகுப்பில் அளித்துள்ளார். வெங்கம்பூரில் குடியேறிய மேற்கூறிய வேளாண்குடி மக்கட்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் நாளடைவில் மறைந்தன. அவர்கள் சந்ததிகள் நலமுற்றுப் பெருகி நன்றாய் வாழ்ந்துவருகின்றனர். இன்னும் இவர்களைப் பற்றிய வரலாறுகளை விவரிக்கின் அது கொங்கு வேளிர் ஒரு பகுதியினருக்கு மட்டும் அண்ணன்மார் சொந்தம் என்று கொண்டாடும் ஒரு வரலாறாக எண்ணவேண்டி நேரிடும். ஆனால் உண்மையில் அவர்கள் குடிமக்களில் எல்லாப் பிரிவினரும் வழிபடக் கூடிய தெய்வமாக ஆவார்கள் என்பது பறையனான சாம்பானை உடன் பிறப்பாகக் கருதி தளபதியாக அண்ணன்மார் வளர்ந்ததும், பூவாண்டிச்சி வீட்டில் குன்றுடையான் வளர்ந்ததும், முதலியார் மகள் குப்பாயியை | | |
|
|