பக்கம் எண் :

14அண்ணன்மார் சுவாமி கதை

வேடுவர் சிறைகொண்ட போது அவளைத் தங்கள் தங்கையென அண்ணர்
கருதியதும், தங்கை அப்பெண்ணை அழைத்து வந்து ஒன்றாக உண்டதும் இன்னும்
பல்வேறு நிகழ்ச்சிகளும் வெளிப்படுத்தும். பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம்
நடந்தும், இல்லற வாழ்வில் அவர்கள் ஈடுபடவில்லை. தங்கம் என்றும் கன்னித் தெய்வம்.
எந்த இலக்கியத்திலும் காணாத உயர்வு அல்லவா இது?

  திருமதி பிருந்தா இ.எப்.பெக் என்பவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். சாஸ்திரி
கூட்டறவு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து நாட்டு கூட்டுறவு தமிழ்க்கல்வி
நிறுவனத்தின் அழைப்புப் பெற்றவர். கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக
உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றுபவர். திருமதி பிருந்தா இ.எப்.பெக் அவர்கள்
கொங்கு நாட்டு மக்கள் வாழ்க்கையை ஆய்வதற்காக பெரியார் மாவட்டம் காங்கயம்
அருகிலுள்ள ஓலப்பாளையம் என்னும் கிராமத்தில் தங்கியிருந்து கொங்கு மக்களைப்
பற்றிய ஆய்வு நூலை “The peasant Society in Kongu Country” வெளியிட்டவர்.
இவர் “அண்ணன்மார் கதை” உடுக்கடிப் பாடல்களை ஆராய்ந்து “The Three Twins -
the telling of a South Indian Epic” என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.
“அண்ணன்மார் சுவாமி கதை” அமெரிக்க நூலகங்களில் இடம் பெற்றிருப்பதை மனம்
திறந்து பாராட்டும் இவர், நான் பதிப்பித்த இந்த அண்ணன்மார் சுவாமி கதை பற்றி பல
தவறான தகவல்களை அளித்துள்ளார். அவற்றைப் பற்றிய தெளிவான கட்டுரை ஒன்றை
திரு.கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்கள் இந்தப் பதிப்பில் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்து நம் நாட்டுப்புற இலக்கிய ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள்,
சம்பந்தப்பட்டவர்களை அணுகி சில செய்திகளைக்