தங்கை உத்தமாபத்தினி; ஒரு சொல் வாசகி; எல்லாம் அறிந்தவள்; சாத்திரங்கள் கற்றவள்; பின்னால் வருவதை முன்னால் சொல்லக் கூடியவள்; அவள் வாழ்வு மணிமேகலையின் வாழ்வைப் போன்றது; இந்த அம்சம் நாம் ஆழ்ந்து வியந்து சிந்திப்பதற்குரியது. நடந்த இந்த உண்மை வரலாறு சிறிது கற்பனையுடன் எடுத்து இயம்பப் பெறுவதும் இக்கதையின் சிறப்பியல்பு ஆகும். அண்ணன்மார் இருவரும் நாட்டு மக்களின் பாதுகாவலர்கள். மக்களுக்குள் யாருக்கு எது நேர்ந்தாலும் காப்பாற்றத் துடித்து முன் வருபவர்கள். தலையூர்க் காளியின் படையைச் சேர்ந்த மேனாட்டு வேடுதளம் அண்ணன்மார் கண்காணிப்பிலுள்ள கூத்தாளை நன்னாட்டில் கோவில் கிராமமெல்லாம் கொள்ளையிட்டுப் பச்சனா முதலி மகள் குப்பாயி என்னும் பெண்ணையும் சிறையெடுத்துப் போகின்றார்கள். செய்தியறிந்து தங்கை துடிதுடித்து அண்ணன்மாரிடம் முறையிடுகிறாள். பொன்னர் உடனே தம்பி சங்கரை அழைத்து வேடு படையைச் சங்கரித்துக் குப்பாயியைச் சிறைமீட்டு வரச் சொல்கிறார். வேங்கை போல் நிற்கும் சங்கருக்கு முன் வேடுதளம் வெள்ளாட்டுக் கூட்டமாகிறது. சிறைப்பட்ட போது குப்பாயி அண்ணன்மாரை நினைத்து அழுது புலம்பும் வரிகள் நெஞ்சை நெகிழ்விப்பவை. | | | தங்கம் அளக்கும் கையால் சாணிதட்டப் போறேனே! பொன்னளக்கும் கையாலே பொதியளக்கப் போறேனே! சிங்கம் இருக்குதென்று (சின்னண்ணா) திகிலில்லை என்றிருந்தேன்! சிங்கமே எங்கொளிந்தாய்? திகில் வந்து சேர்ந்ததிப்போ! ஆனையிருக்குதென்று-சின்னண்ணா-அச்சமில்லை என்றிருந்தேன்! | | |
|
|