ஒரு கண்ணோட்டம் துவரன்பதி முதல் கொங்கு நாடு வரை | ‘பத்ம பூஷணம்’ ம.ப.பெரியசாமித் தூரன் | அண்ணன்மார் கதையோடு கொங்கு வேளாளர்களின் வரலாறும் பின்னிக் கிடக்கிறது. கள்ளழகர் அம்மானை அல்லது பொன்னழகர் அம்மானை என்ற நூலும் இதையே விவரிக்கின்றது. அதையும், அண்ணன்மார் கதை படிக்கும் நாடோடிக் கலைஞர் கூறுவதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் விளக்கங்கள் கிடைக்கும். துவாரகையிலிருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டே வந்த கூட்டங்கள் மெல்ல மெல்லத் திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து மீண்டும் வடக்கு நோக்கிப் புறப்பட்டு மானாமதுரை, மதுரை முதலிய இடங்களில் தங்கி பிறகு காவிரிக்கரை அடைந்து வேளாண்மை செய்யத் தொடங்கினர் என்று தெரிகின்றது. அந்த நிலையில்தான் வேடுவர்களுக்கும் வேளாளர்களுக்கும் பல சிறு சண்டைகள் மூண்டனவாம். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய காடுகளை அழித்தும் அங்குள்ள பன்றிகளைக் கொன்றும் வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கும்பொழுது பூசல்கள் ஏற்படுவது இயல்பு. இறுதியில் அண்ணன்மார் தமது வீரத்தால் வேடுவர்களை வென்று பிறகு அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டர்களாம். சண்டையில் சின்னண்ணன் இறக்கவே, பெரியண்ணனும் உயிர்நீத்ததாகக் கூறுவார்கள். | | |
|
|