பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை17

   அவர்களே நாம் கொண்டாடும் தெய்வங்கள்.

   துவாரகையிலிருந்து வந்து ஓரிடத்தில் தங்கியது இன்றும் ‘துவரன்பதி’ என மத்திய
இந்தியாவில் வழங்குகிறது. துவாரகையிலிருந்து வந்தோர் துவரன் ஆனார்.
துவரன் கூட்டமே தூரன் கூட்டம் என மருவிற்று என்பது என் யூகம். கூட்டங்கூட்டமாய்
வந்ததால் பல கூட்டப் பெயர்கள் வந்தன.

   இது பற்றி நீளமாக ஆராய வேண்டும். யாராவது இதைச் செய்தால் வேளாளரது
தொன்மை தெளிவாகும். மொகஞ்சதாரோவில் பேசிய மொழி தமிழ் என்று இப்பொழுது
நம்புகின்றார்கள். இதையும் சேர்த்துப் பார்த்தால் பல உண்மைகள் புலனாகும்.

   இன்னும் இவற்றை விரிவாக ஆழமாக ஆராய வேண்டும்.