பக்கம் எண் :

18அண்ணன்மார் சுவாமி கதை

மண்ணும் மக்களும்
 

அண்ணன்மார்
எங்கள் குலதெய்வம்
கே.பெரியண கவுண்டர
 

  கொங்கு வேளாளர் சமூகத்தில் நமது தூரன் குல கோத்திரத்துக்கு அண்ணன்மார்
சுவாமி குல தெய்வமான வரலாறென நம் முன்னோர்கள் மொழிந்ததை நான்
செவியுற்றபடி சுருக்கி இங்கு குறிப்பிடுகிறேன்.

  ஆதிகாலத்தில் தூரன் குல கோத்திரத்தவர் சேலம் ஜில்லா திருச்செங்கோடு
தாலூக்கா குமார மங்கலம் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் காலஞ் சென்ற மத்திய
அமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுடைய முன்னோரின் பங்காளிகள் ஆவர்.

  அப்போது பெரும் பஞ்சம் உண்டாகி, மாடு, கன்றுகளுக்கு தீவனம்கூட
கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்ட போது, வாடச்சின்னைய கவுண்டர் என்பவர் மற்றவர்களையெல்லாம் அழைத்து, ஆலோசித்து முடிவு செய்து அதன்படியே கிராமத்தில் உள்ளவர்களில் சிலரை அங்கேயே இருக்க வைத்து விட்டு, சிலர் மட்டும் பயிர், பச்சை தீவனம் இருக்குமிடம் நோக்கி மாடுகளை ஓட்டிக் கொண்டு புறப்பட்டார்கள்.

  புறப்பட்டு தெற்கே திருச்செங்கோடு அருகில் மோழியப்பள்ளி வழியாக வரும்போது நமது குலதெய்வமாகிய அண்ணன்மார் சுவாமி கோவிலை முதல் முதலாகக்